Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 31 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிஸ்கோ லெப்ஸ் விருது இரவு 2020 - மெய்நிகர் விருது நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடியதுடன், 2021 மற்றும் அதற்கும் அப்பாலான நோக்கங்களை வெளிப்படுத்தியிருந்தது.
முந்தைய ஆண்டில் பெற்ற கணிசமான சாதனைகள் மற்றும் மிகச் சிறந்த பொருளியல் கலைப்பொருட்களை அங்கீகரிப்பதற்காக 2014ஆம் ஆண்டு சிஸ்கோ லெப்ஸ் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கூட்டாளிகளை இணைத்து நிறுவனம் எவ்வாறு சிறப்பைக் கொண்டாடுகிறது மற்றும் சிஸ்கோ லெப்ஸின் கலாசாரம் மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல பண்புகளுக்கு வெகுமதி அளிப்பதையுமே இந்த விருதுகள் முதன்மையாகக் கொண்டுள்ளன.
இந்நிழ்ச்சியில் இணை நிறுவுனர், இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட உப தலைவர் - பொறியியல், ஷானில் பெர்னாந்து சிறப்புரை ஆற்றியதுடன், சவாலான வருடத்தில் பலமாகச் செயற்பட்டு, தொடர்ந்தும் சிறந்த தரத்தை வழங்கிய, தொற்றுநோய்களுக்கு மத்தியில் சிஸ்கோ கோப்ரேஷன் உலகெங்கிலும் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க உதவிய புதுமையான தீர்வுகளுக்காக அணிக்குப் பாராட்டுத் தெரிவித்தார். பொது முகாமையாளரும், பகிரப்பட்ட சேவைகளின் பதில் தலைவருமான ரசிக கருணாதிலக தனது உரையில், நிறுவனத்தின் வருடாந்திர கணக்கெடுப்பிலிருந்து முக்கிய கண்டுபிடிப்புகளை முன்வைத்ததுடன், சிறந்த முடிவுகளை அடைவதற்கு பங்களித்த அணிகளையும் பாராட்டியிருந்தார்.
சிஸ்கோ லெப்ஸுக்கு அளித்த மதிப்புமிக்க பங்களிப்புகளுக்காக சிறந்த பொறியியல் சிறப்பை அங்கீகரிப்பதற்கும் பொறியியல் குழுக்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோல் ஒஃப் ஃபேம் விருது (Hall of fame), விசேட அங்கீகாரத்துடன் சிஸ்கோ ஷொப் அணிக்கு (Sysco Shop team) தலைமைத்துவ அணியினால் வழங்கப்பட்டது. இரண்டாவது ரனர் அப் விருது சிஸ்கோ டிலிவரி அணிக்கும் (Sysco Delivery team), முதலாவது ரனர் அப் விருது பே பிளஸ் அணிக்கும் (Pay Plus team) வழங்கப்பட்டது. 2020 வருடத்தின் ஹோல் ஃஒப் ஃபேம் (Hall of fame) விருதின் வெற்றியாளர் க்ளவுட் ப்ரைசிங் அணியாகும் (Cloud Pricing team).
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago