Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
Exam Genius நிறுவனத்தின் மூலம் பிள்ளைகளின் அறிவை மேற்படுத்தி, பிள்ளைகளுக்கு முறையாகப் பயிற்றுவிக்கின்ற செயற்கை ரொபோ ஆசிரியருடன் கூடிய நேர இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் புதிய படைப்பு க்ரீன்ரெல் கைக்கணினி (TAB) ஊடாகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நேர இயந்திரத்துடன் கூடிய செயற்கை ஆசிரியரின் வருகையானது, இலங்கையின் நவீன கல்வியின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்பதே கல்வி துறை சார்ந்த பலரினதும் கருத்தாகும். செயற்கை அறிவை (Artificial Intelligence) பயன்படுத்தி, பிள்ளைகள் வினாக்களுக்கு பதில் அளித்துள்ள விதம் தொடர்பாக, முந்திய தரவுகளை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக்குட்படுத்துகிறது. அதன் மூலம் ஒவ்வொரு பாடம் தொடர்பாகவும் பிள்ளையின் ஆற்றல்கள், குறைப்பாடுகள், சந்தேகமான இடங்கள் இனங்காணப்படுகின்றன.
அதன் அடிப்படையிலான முடிவுகளின் பிரகாரம், அடுத்தடுத்த வினாத்தாள்களுக்கு பிள்ளைக்கு வழங்க வேண்டிய பொருத்தமான பாடம், வினாக்கள் தொடர்பான தீர்மானத்தை மேற்படி ரொபோ ஆசிரியரே மேற்கொள்ளும்.
இவ்வாறான சிக்கலான ஆய்வுகள், முடிவுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ளும் திறன் கணினி கட்டமைப்பொன்றுக்கு மாத்திரமே உண்டு.
மேற்படி நேர இயந்திரத்தின் மூலம் நேரத்துக்கு வேலை செய்வதோடு நேரத்தை முகாமைத்துவம் செய்து வினாக்களுக்கு பதில் அளிப்பதற்கு பிள்ளைகளை தயார் செய்யலாம். வினாக்களுக்கு பிள்ளை அளித்த பதில்களில் சரி, பிழை பார்த்து, கிடைத்துள்ள புள்ளிகள், சித்தி மட்டத்தை உடனடியாகப் பார்க்க முடிவதோடு, சகல வினாக்களுக்கும் சரியாக பதிலளிக்கும் விதத்தை மீட்டுப் பார்க்கவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago