2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சொஃப்ட்லொஜிக் லைஃப்பின் ஆயுள் விற்பனை மாநாடு

Editorial   / 2018 மே 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொஃப்ட்லொஜிக் அதன் சிறந்த விற்பனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வை, அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. வருடாந்த ஆயுள் விற்பனை மாநாடு இம்முறை 'பெருமையுடனான முன்னணி வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றதுடன் 2017 இல் உயர் சாதனைகளைப் புரிந்த நிறுவனத்தின் பணியாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வைபவத்தில் சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதித் தலைவர் போல் ரத்னாயக்க, நிர்வாக சபை உறுப்பினர்கள் சுஜீவ ராஜபக்ஸ, ரே அபயவர்தன, முகாமைத்துவ பணிப்பாளர் இப்திகார் அஹமட், சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும்  பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மொத்தமாக 291 விருதுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விருதுகள் திறமையான வாடிக்கையாளர் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஓர் உந்துசக்தியைப் பணியாளர்களுக்கு வழங்குகிறன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .