Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015 சிங்கப்பூர் Grand Prix போட்டிகளின் நரம்புகளை சூடேற்றும் திகில் மிக்க அனுபவத்தை நேரடியாகக் கண்டு மகிழும் வாய்ப்பை இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இந்தப் போட்டிகளை கண்டு மகிழும் வாய்ப்பு அதற்கான பிரயாண செலவு தங்குமிட வசதி என எல்லாவற்றையும் இலங்கையில் அதிகளவு விற்பனையாகும் டயர் வர்த்தக முத்திரையான சியெட் வழங்கியுள்ளது.
செல்வன் ஜனித் டி சில்வா, அனுகா குணவர்தன, திணேஷ் பிள்ளை, ரொலிங்கா பெரேரா, ஆனந்தி வில்லவராஜா ஆகியோரே இந்த அருமையான வாய்ப்பை வென்றுள்ள ஐந்து அதிர்ஷ்டசாலிகள் ஆவர். நான்கு தனியார் வானொலி அலைவரிசைகள் மூலம் ஒலிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்;டதன் மூலம் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கக் கூடிய சிங்கப்பூர் மெரினா பே ஸ்ட்ரீட் செர்கிட்டில் இடம்பெறவுள்ள மெய் சிலிர்க்க வைக்கும் இந்தப் போட்டிகளை கண்டு மகிழும் வாய்ப்பு இவர்களுக்கு கிட்டியுள்ளது.
நீண்ட தூர பயணத்துக்கு துணை போகும் சியெட்டின் 'மைலேஸ்' டயர் விற்பனை ஊக்குவிப்புக்காக E FM, லைட் FM, இயஸ் FM, கிஸ் FM என்பன மூலமாக ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் சென்று வருவதற்கான சிக்கன பிரிவு இருவழி விமான பயணச் சீட்டு, சிங்கப்பூரின் கிராண்ட் பசுபிக் நான்கு நட்சத்திர ஹோட்டலில் நான்கு தினங்கள் தங்கியிருப்பதற்கான வசதிகள், போட்டியை பார்வை இடுவதற்;கான பிரவேசப் பத்திரம், 100 டொலர் பெறுமதியான FI பரிசுப் பொதி என்பனவற்றை உள்ளடக்கியதே இந்தப் பரிசுத் திட்டமாகும். அத்தோடு இவ்வாண்டு சிங்கப்பூர் Grand Prix போட்டிகளோடு இணைந்ததாக சமகாலத்தில் இடம்பெறும் Maroon 5, Bon Jovi, மற்றும் pharrell Williams இசை நிகழ்வுகளை கண்டு களிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.
செப்டம்பர் 18 முதல் 20 வரை 2015 போர்மியுலா 1 சிங்கப்பூர் Grand Prix போட்டிகள் இடம்பெறவுள்ளன.
'ரேடியல் சந்தையில் சியெட்டின் ஆதிக்கமானது மோட்டார் விளையாட்டுடனான எமது இணைப்பை மிகவும் தர்க்கபூர்வமானதாகவும் உறுதியானதாகவும் ஆக்கியுள்ளது'என்று கூறினார் சியெட் களனி ஹோல்டிங்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் ரவி தத்லானி. 'உள்ளுர் மோட்டார் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் சியெட் அவற்றுக்கு அளித்து வரும் அளப்பரிய ஆதரவின் காரணமாக இந்த முத்திரை நாமம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதேநேரம் வீதிகளிலும் அதன் செயற்பாடு சந்தையில் தலைமை தாங்கும் பிரிவு என்ற ரீதியில் அதன் பெயரை தொடர்ந்து தக்கவைத்துள்ளது'என்று அவர் மேலும் கூறினார்.
ரேடியல் டயர் பிரிவில் இலங்கையில் அதிகளவு விற்பனையாகும் டயர் வகை சியெட் ஆகும். சந்தையில் மொத்த டயர் விற்பனையில் அது 31 வீத பங்கினைக் கொண்டுள்ளது. தற்போது 31 வகை வித்தியாசமான அளவுகளில் இது கிடைக்கின்றது. இதில் 22 அளவுகள் கார்களுக்கு உரியவை. ஆறு அளவுகள் வேன்களுக்கும் நான்கு அளவுகள் விளையாட்டுப் பிரிவு (SUVs) வாகனங்களுக்கும் உரியவை.
2014 ஜுனில் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கையில் அதன் ரேடியல் டயர் உற்பத்தி வளங்களை விரிவாக்கம் செய்தது. களனியில் உள்ள அதன் உற்பத்தி வளாகத்தில் புதிய ரேடியல் டயர் உற்பத்தி பிரிவு தொடங்கப்பட்டது. இதன் மூலம் கம்பனியின் ரேடியல் டயர் உற்பத்தி மற்றும் பராமரிப்பு ஆற்றல் 70 வீதத்தால்; அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் வருடாந்தம் 450000 டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது நாட்டில் இந்த வகை இறக்குமதியை 60 வீதம் மட்டுப்படுத்தி அதற்கான பங்கினை வழங்குகின்றது.
தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino அல்லது Electrical Cables & Allied Products of Turin என்பதன் சுருக்க வடிவமாக இது உள்ளது. 2010; 2011மற்றும் 2012ம் ஆண்டுகளில் தேசிய வர்த்தக சிறப்பாற்றல் விருதையும் 2013ம் ஆண்டில் பாரிய அளவிலான உற்பத்திகளுக்கான தேசிய தர விருதையும் கம்பனி வென்றுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் இந்தியாவின் RPG குழுமத்துக்கும் இலங்கையின் களனி டயருக்கும் இடையிலான வெற்றிகரமான வர்த்தக கூட்டு முயற்சியாகும்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago