2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சீனா உதவி அதிவேக நெடுஞ்சாலைக்கு

Gavitha   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹாதுடுவ - இரத்தினபுரி வரையில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்க சீனாவின் EXIM வங்கி முன்வந்துள்ளது.

73.9 கிலோமீற்றர் தூரத்தை உள்வாங்கி நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹாதுடுவ இடம்மாறல் பகுதியிலிருந்து பெல்மதுளை வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வுகள், வடிவமைப்புகள் மற்றும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X