2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு சிங்கர் மடிகணினிகள்

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உ/த பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 21 மாணவர்களுக்கு, தனது நவீன சிங்கர் X Series மடிகணினிகளை சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கர் X Series மடிக்கணினிகளை மாணவர்களிடம் கையளித்தார்.

தேசிய மட்டத்தில் உச்ச ஸ்தானங்களைப் பெற்று மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விசேட நிகழ்வில், சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பிரிஸ், நிதிப் பணிப்பாளரான லலித் யட்டிவெல மற்றும் மனித வளத் துறைப் பணிப்பாளரான நேமிந்த கருணாரட்ண ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். கல்வி அமைச்சு மற்றும் வர்த்தக சமூகத்தின் சார்பிலும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.   

இலங்கையில் கல்வியை மேம்படுத்துவதில் சிங்கர் நிறுவனம் எப்போதும் தனது ஊக்குவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் ரீதியாக காணப்படுகின்ற இடைவெளிகளை நிரப்பி, இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக மாணவர்களை தட்டிக்கொடுத்து, உச்ச இலக்கை அவர்கள் அடைந்துகொள்வதற்கு முயற்சிக்க உதவுவதில் நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்துள்ளது.  

இந்த ஆண்டு நிகழ்வின் மூலம் சிங்கர் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், '2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ள நாம், ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வில் உச்சத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டவர்களுக்கு கௌரவமான வழிமுறைகளை ஏற்படுத்தல் ஆகியவற்றின் மீது மகத்தான நம்பிக்கை கொண்டுள்ளதால், நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக கல்வித் தளத்துக்கு ஆதரவளித்து, எதிர்காலத் தலைமுறைகளை ஆளுமைப்படுத்தி, இலங்கையில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X