2025 ஜூலை 30, புதன்கிழமை

சிலோன் டொபாக்கோ கம்பனி ஆய்வுகூடத்துக்கு ISO/IEC 17025:2005 சான்று

Gavitha   / 2016 நவம்பர் 27 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி நிறுவனத்துக்கு உலகத்தரம் வாய்ந்த இரு சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தன. சர்வதேச அமைப்புகளான ISO மற்றும் IEC ஆகியவற்றினால் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.  

பரிபூரண மதிப்பாய்வைத் தொடர்ந்து, சிலோன் டொபாக்கோ கம்பனி ஆய்வுகூடம் இந்தச் சான்றைப் பெற்றிருந்தது. இரசாயன பொருட்கள், எந்திரவியல் பரிசோதனைகளுக்காகத் தரம், நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் போன்றவற்றுக்கான   சிலோன் டொபாக்கோ கம்பனியின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர், ருக்ஷான் குணதிலக கருத்துத்தெரிவிக்கையில், “2002ம் ஆண்டு முதல் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆய்வு கூடம் இந்தச் செயற்பாடுகளை பின்பற்றி வருகிறது. 2016ஆம் ஆண்டின் விசேடத்துவம் யாதெனில், எம்மால் ISO சான்றை பெற்றுக்கொள்ள முடிந்தது” என்றார்.   

சிலோன் டொபாக்கோ கம்பனி ISO/IEC 17025:2005 சான்றைப் பெற்றுக்கொண்டதன் மூலமாகத் துல்லியமான தரவுகளை வழங்க முடிகின்றமையையும், உயர் தரங்களை பேண முடிகின்றமையையும் திட்டமிடல் மற்றும் தீர்மானமெடுத்தல்களில் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .