2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி ஸ்தாபிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தில் ஹொல்சிம் லங்கா நிறுவனத்தினால், ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி, பிரதேசவாசிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தக் அங்குரார்ப்பண நிகழ்வின் போது, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தினால் சூழலுக்குப் பாதுகாப்பானக் கட்டடம் எனும் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர். கலாநிதி. ரொஹான் கருணாரட்ன மற்றும் ஹொல்சிம் லங்கா முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

'இலங்கையின் முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளியின் நிர்மாணச் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஏனைய சகல சமூக கட்டடங்களையும் கவர்வதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையாக அமைந்துள்ளதாக நாம் கருதுகிறோம்' என ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் வெளி விவகார மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான முகாமையாளர்  கிறிஷாந்த கமகே தெரிவித்தார்.

மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்த காணியில் இந்த முன்-பள்ளி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது அத்துடன், இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இவை முன்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பிரதேசங்களிலிருந்து பெறப்பட்டிருந்தன. இந்த கட்டடத்தின் மரவேலைகள் கிராமத்திலிருந்து பெறப்பட்ட மரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், கூரை சூழலுக்கு பாதுகாப்பான சின்க் அலுமினியம் புஐ தகடுகள் கொண்டு 100 சதவீதம் அஸ்பெஸ்டஸ் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X