Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிஜிட்டல் ஹோல்டிங்ஸ் லங்கா (பிரைவட்) லிமிட்டட் நிறுவனத்துக்கான, கூட்டு நிறுவனமான Doc990 டிஜிட்டல் ஹெல்த் (பிரைவட்) லிமிட்டட், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் முழுமையான துணை நிறுவனமாகவும் ஆசிரி மருத்துவமனை ஹோல்டிங்ஸ் பிஎல்சி உடன் இணைந்து, டிஜிட்டல் ஹெல்த் (பிரைவட்) லிமிட்டட் கூட்டு நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இதையொட்டி நவலோக்கா பிஎல்சி மற்றும் சிலோன் மருத்துவமனைகள் பிஎல்சி (டேர்டன்ஸ்) ஆகியவை பங்குகளை முதலீடு செய்துள்ளன.
இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனருக்கும் மூன்று முன்னணி தனியார் மருத்துவமனை குழுக்களுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, டயலொக் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தனது கூட்டு நிறுவனப் பங்காளர்களின் சுகாதார நிபுணத்துவத்துடன் டிஜிட்டல் ஹெல்த் பாதுகாப்புச் சூழல் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தனிப்பட்ட துணிகர செயற்றிட்டத்தின் மூலம், 80 மருத்துவமனைகளில் உள்ள 1,500க்கும் அதிகமான வைத்தியர்களை, அதன் டிஜிட்டல் சுகாதார மேடையின் ஊடாக அணுக முடியும். இந்தச் சேவையை Doc.lk மூலமாக அல்லது 990 க்கு அழைப்பை ஏற்படுத்தவதன் மூலமாக அல்லது Doc 990 app இனைப் பயன்படுத்துவதன் மூலமாக, அணுகிட முடியும்
டிஜிட்டல் ஹோல்டிங்ஸ் லங்கா நிறுவனம் 53.2 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளதுடன் ஆசிரி, நவலோக்கா மற்றும் சிலோன் வைத்தியசாலை ஆகியவை முறையே, 22.8, 15 மற்றும் ஒன்பது சதவீதத்தைக் கொண்டுள்ளன.
Doc 990 தற்போது, உடல் தொடர்பான தீர்வுகளுக்கு வைத்தியசாலை அமர்வுகளை உள்ளடக்கிய பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகின்றது.
மருத்துவ நிபுணர்களைத் தொலைபேசியின் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும். உங்கள் வீட்டுக்கே மருந்துகளை வரவழைத்துக்கொள்ளவும், மற்றும் பிரதான ஆய்வு கூடங்களின் ஆய்வு அறிக்கைகளை Doc 990 வலைப்பக்கத்தில் பார்வையிடவும் முடியும்.
இலங்கையின் முன்னணி மருத்துவப் பதிவு App ஆன Doc990 App பல மொபைல் ஒபரேட்டர்கள் மற்றும் வங்களின் மூலமும் உங்கள் பில் தொகையுடன் இணைத்தும், eZ Cash, Genie, Amex, Visa kw;Wk; Master Cards, Vishwa ஊடாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் கூட்டுத் தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே கருத்து தெரிவிக்கையில், Doc990 டிஜிட்டல் சுகாதார இடத்தை மாற்றியமைக்க உதவுகிறது. இந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்வதன் மூலம், இலங்கையின் சுகாதாரப் பிரயாணத்தில் டிஜிட்டல் பயணத்தை விரைவாகக் கண்காணிக்கும்” எனவும் தெரிவித்தார்.
நவலோக்க வைத்தியசாலை பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையர்களுக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் டிஜிட்டல் ஹெல்த்துடன் இணைந்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்குவதில் இன்னுமொரு மைல்கல்லை எட்டவுள்ளது” எனக் கூறினார்.
கூட்டாண்மை தொடர்பாகக் கருத்து தெரிவித்த, சிலோன் வைத்தியசாலை பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ மற்றும் வர்த்தக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ரக்ஷித துடாவே, வழக்கமான எமது மருத்துவப் பராமரிப்பு முறைகளை மேம்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சுற்றுச்சூழலுக்கு வழிவகுத்தலே எமது நோக்கமாகும்” எனக் கூறினார்.
டிஜிட்டல் ஹெல்த் (பிரைவட்) லிமிட்டடின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி அப்சரா விஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், “சுகாதார பயணத்தில் இலங்கை முக்கிய பங்கை வகிப்பதற்கும் உயிர்களை வளப்படுத்த இலங்கையில் சுகாதார பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பை மாற்றுவதற்கும் உதவுவதற்கும் நவலோக்கா மற்றும் டேர்டன்ஸ் மருத்துவமனைகள் எங்களுடன் இணைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago