2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டிரையம்ப்பின் 'பருத்தி பிரா' வகைகள்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதன பருத்தி தெரிவுகளின் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாடைகள் உற்பத்தியில் முன்னோடியான டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம்; அண்மையில் அதன் 'பருத்தி' தொகுப்பில் (Cotton Comfort) புதிய மற்றும் மென்மையான இரு பிரா தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு புதிய தெரிவுகளும் டபள் பிரா பெறுமதி பொதிகளில் கிடைக்கின்றன. இந்த தினசரி பிரா வடிவமைப்புகள் மேலதிக சௌகரியம் கருதி பெறுமதியான பொதிகளில் வருகின்றன. 

நேர்த்தியான, எடை குறைந்த, வேறெந்த சேதன பருத்தியை காட்டிலும் மென்மையான இந்த ஸ்டைலான வடிவமைப்புகளுடன் கோடை காலத்தினை மகிழ்;ச்சியுடன் களியுங்கள். இந்த அதிநவீன வடிவமைப்புகள் அணிபவருக்கு சௌகரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவதால் வெப்பமான மற்றும் ஈரலிப்பான நாட்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. 

'உங்களுக்கு பொருத்தமான தினசரி உள்ளாடை தெரிவினை தேர்ந்தெடுக்க விரும்பினால் இவ்விரு புதிய பருத்தி பிரா வகைகளும் உங்களுக்கு பொருத்தமானதாக அமையும். இந்த பிரத்தியேக பிரா வகைகள் ஆடைகளின் கீழே நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. மேலதிக பாதுகாப்புக்காக பேடட் அற்ற மற்றும் டபள் லேயர்ட் கொண்ட இந்த பிரா வகைகளுடன் தினசரி சௌகரியத்தை உணர முடியும்' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.  

'இந்த புதிய பிரா தெரிவுகள் 90% வீதம் இயற்கையான பருத்தியாலும், 10% இலாஸ்டிக்கினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கப் அளவுகள் வரை கிடைக்கக்கூடிய இந்த பிரா Coral, கருப்பு, tropical Blue மற்றும் Neutral Beige ஆகிய வர்ணத்தெரிவுகளில் கிடைக்கின்றன' என மேலும் அவர் தெரிவித்தார்.

Tropical Blue மற்றும் Neutral Beige டபள் பிரா பொதியின் விலை ரூ.2195 ஆகவும், Coral மற்றும் கருப்பு டபள் பிரா பொதியின் விலை ரூ.2395 ஆகவும் அமைந்துள்ளது. இந்த தெரிவுகளை மெஜஸ்டிக் சிட்டி, லிபர்ட்டி பிளாசா, Crescat, Alfred House Gardens, கண்டி சிட்டி சென்டர், மொறட்டுவ மற்றும் கப்புவத்தை K- Zones ஆகிய பிரதேசங்களிலுள்ள டிரையம்ப பிரத்தியேக காட்சியறைகளிலும், நாடுமுழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X