Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற Asia Pacific ICT Alliance (APICTA) விருதுகள் 2015 இல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் பிரிவில் வெற்றியாளராக Zone24x7 தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியா, சீனா, ஹொங் கொங், மலேசியா, தாய்லாந்து, தாய்வான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பிராந்திய நாடுகளின் 11 அணிகளுடன் போட்டியிட்டு இந்த விருதை Zone24x7 தனதாக்கியிருந்தது. ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பிரிவில் போட்டியிட்டிருந்த ஒரே இலங்கை அணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Zone24x7 இன் பொறியியல் பிரிவின் பதில் தலைவரும் பொது முகாமையாளருமான கலாநிதி. சங்கல்ப கம்வரிகே கருத்து தெரிவிக்கையில், 'Zone24x7 க்கு மட்டும் இது ஒரு பெருமைக்குரிய வேளையாக அமைந்திராமல், இலங்கையின் முழுமையான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கும் பெருமைப்பட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப அடிப்படையிலான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காணப்படும் முன்னணி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுநிலையங்கள் ஆகியவற்றுடன் நாம் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது' என்றார்.
16 APICTA அங்கத்துவ நாடுகளின் சிறந்த தயாரிப்புகள் மட்டும் ஒவ்வொரு ஆண்டிலும் தெரிவு செய்யப்பட்டு, இந்த போட்டியில் போட்டியிட அனுமதிக்கப்படுகின்றன. இலங்கையின் பொறியியலாளர்களின் அறிவுத்திறனைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பொன்று, ஏனைய சகல தயாரிப்புகளையும் பின்தள்ளி தங்க விருதை சுவீகரித்துள்ளமை விசேட அம்சமாக அமைந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக திரட்ட எதிர்பார்க்கும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கும் இவை மிகவும் நேர்த்தியான அடையாளமாக அமைந்துள்ளதுடன், இந்த இலக்கை எய்துவதற்கு ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் பிரதான பங்களிப்பாளர்களாக அமைந்திருக்கும்' என கலாநிதி. கம்வரிகே மேலும் குறிப்பிட்டார்.
விருதை வென்ற Autonomous Inventory Robot (AZIRO) என்பது இலங்கையில் வடிவமைக்கப்பட்டு, Zone24x7 இனால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. Radio frequency identification (RFID) அடிப்படையிலான கையிருப்பு கணக்கெடுப்பு மற்றும் சுழற்சி கணக்கிடல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த தயாரிப்பு அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அந்நாட்டின் சிறந்த 3 பல்பொருள் அங்காடித் தொடர்களில் 2 தொடர்கள் தமது RFID பதிக்கப்பட்ட பொருட்களை கண்காணிப்பதற்கு உபயோகிக்கவுள்ளனர்.
அமெரிக்காவின் காப்புரிமையை Zone24x7 ஏற்கனவே பெற்றுள்ளதுடன், AZIRO வின் அறிவுசார்ந்த சொத்துக்களுக்காக மேலும் இரு காப்புரிமைகளையும் பெற்றுள்ளது. தேசிய சிறந்த தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கல் 2015 (NBQSA) இல் AZIRO வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையிலிருந்து ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவில் 2013 ஆம் ஆண்டு ஹொங் கொங்கில் இடம்பெற்ற விருதுகள் வழங்கலில் Zone24x7 இனால் வடிவமைக்கப்பட்டிருந்த Braille to go (B2g) மெரிட் விருதை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Zone24x7 இன் பிரதம நிறைவேற்று அதிகாரி லாவன் பெர்னான்டோவின் ஆக்க வெளிப்பாடாக AZIRO அமைந்துள்ளதுடன், இவர் அமெரிக்காவின் விற்பனை தொழில்நுட்பத்துறையில் புத்தாக்க சிந்தனையாளராகவும் புதிய புரட்சிகளை ஏற்படுத்துபவராகவும் கருதப்படுகிறார்.
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago