2025 ஜூலை 19, சனிக்கிழமை

தலதா மாளிகைக்கு வர்ணம்பூசும் லங்கெம் ரொபியலக் பெயின்ட்ஸ்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ரொபியலக்' வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்துனராகவும் திகழ்கின்ற லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது, இவ்வருட எசல பெரஹரவை முன்னிட்டு கண்டி தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணம் பூசுவதற்கான தனது வருடாந்த 'வர்ண பூஜா' முன்னெடுப்பை மீண்டும் ஒரு தடவை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 

புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள ஆலயமான தலதா மாளிகையுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட சமய அனுஷ்டானங்களில் ஒன்றாக இப்போது இந்த வருடாந்த 'வர்ண பூஜா' இடம்பிடித்திருக்கின்றது. லங்கெம் பெயின்ட்ஸின் வருடாந்த நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாக இடம்பிடித்துள்ள இந்த நிகழ்வு, இப்போது பதினோராவது வருடமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது. 

'ஸ்ரீ தலதா மாளிகையின் அனைத்துக் கட்டிடங்கள் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கும் வர்ணம் பூசும் மிக உயர்ந்த இந்த புண்ணிய கருமத்தை லங்கெம் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டமையானது, இரக்க குணத்துடன் மிகுந்த பக்தியுணர்வு நிறைந்ததும் ஆகும். இந்த புண்ணிய கருமத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு வழிகளிலும் பங்களிப்புக்களை வழங்கிய  லங்கெம் நிறுவனத்தின் மீதும், அதன் ஊழியர்கள் மீதும் புத்த பெருமானின் புனித தந்தத்தாதுவின் ஆசீர்வாதம் பொழியட்டும்' என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ராஜகீய பண்டித அதிசங்கைக்குரிய மஹோபத்யாய கலகம தம்மதஸ்ஸி சிறிதம்மானந்த தேரர் தெரிவித்தார். 


'லங்கெம் ரொபிலக் இனால் தொடர்ச்சியாக பதினோராவது வருடமாக மேற்கொள்ளப்படும் இப் புண்ணிய கருமம் மிகவும் பாராட்டுக்குரியது. புத்த பெருமானின் புனித தந்தத்தாதுவின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்' என்று மல்வத்து பீடத்தின் பிரதி மகாநாயக்கர் பேராசிரியர் சாஹித்திய சக்கரவர்த்தி நியாங்கொட தர்ம கீர்த்தி சேர் சங்கரக்சித விஜிதசிறி மகா தேரர் கூறினார். 

முதலாவது ரந்தோலி பெரஹர ஆகஸ்ட் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டி வீதிகளில் வீதி உலா வரவுள்ளது. போயா தினமான ஆகஸ்ட் 29ஆம் திகதி இடம்பெறும் இறுதி ரந்தோலி பெரஹர, அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் இடம்பெறவுள்ள 'தவல் பெரஹர' (பகல்நேர பெரஹர) ஆகியவற்றின் போது பெரஹர நிகழ்வுகள் உச்சநிலையை அடைந்திருக்கும்.

தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல கூறுகையில் எசல பெரஹரவை முன்னிட்டு ஒரு சாதனையாக தொடர்ச்சியாக பதினோராவது வருடமாகவும் தலதா மாளிகைக்கு வர்ணம் பூசுவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழஙகியமைக்காக லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். 'அறப்பணிக்கான இந்த ஆதரவானது அனைத்து பௌத்தர்களின் மனதிலும் அளவுகடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது எமது  உறுதியான நம்பிக்கையாக இருக்கின்றது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளரான றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'எமது நிறுவனமே இவ்வாறான ஒரு செயற்றிட்டத்தை பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தனியொரு நிறுவனமாக இந்த 'வர்ண பூஜா' முன்னெடுப்பை ஆரம்பித்து வைத்தது. பௌத்த உலகில் மிகவும் புனிதமான மற்றும் வணக்கத்திற்குரிய சமய அடையாளமாக தலதா மாளிகை திகழ்கின்றது. எனவே, எசல பெரஹரவை முன்னிட்டு பதினொரு வருடங்களாக இந்த கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணம் பூசுவதையிட்டு பெருமைக்குரிய கௌரவமும் சிறப்புரிமை உணர்வையும் நாம் பெறுகின்றோம்' என்றார்.

'இந்த செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தை கடைப்பிடிக்கும் முகமாக தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு வர்ணம் பூசுவதற்காக, விஷேடமான தூய்மையாக்கல் உள்ளடக்கங்களை தன்னகத்தே கொண்டதும் அதேநேரம் விஷேடமாக தனிச் சிறப்புமிக்க ஓர்க்கிட் வெள்ளை நிறம் கலக்கப்பட்டதுமான - விஷேடமாக உருவாக்கப்பட்ட, நீடித்து உழைக்கக் கூடிய 'இலாஸ்டமரிக் பெயின்டை' நாம் பயன்படுத்தினோம். மிக உன்னதமான ஒரு புண்ணிய கருமமாக இது இருப்பதற்கு புறம்பாக, இவ்வாறான முன்னெடுப்புக்களின் ஊடாக இலங்கையின் வளமிக்க கலாச்சாரம் மற்றும் மரபுரிமைக்கு பங்களிப்பு வழங்க முடிவதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். லங்கெம் ரொபியலக் என்பது முழுமையாகவே உள்நாட்டில் உருவான இலங்கைக் கம்பனியாக திகழ்கின்றது. அதனால், இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் ஒரு முன்னோடியான லங்கெம் நிறுவனமானது, இன்று இலங்கையின் மிகப் பெரிய உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்தும் நிறுவனமாகவும் உள்ளது. லங்கெம் நிறுவனத்தின் உயர்ரக உற்பத்தி வகைகளுக்குள் - எமல்சன், எனாமல், வெதர் கோட், விஷேட தோற்றப்பாட்டுக்கான வர்ணப்பூச்சு, பிரைமர்ஸ், துணையுற்பத்திகள், சுவர் தயார்படுத்தல் உற்பத்திகள், நிலப் பூச்சுகள், அன்ரி கொரோசிவ், பசைத்தன்மை சார்ந்தவை, மர உற்பத்திகளை பாதுகாப்பவை, வாகனங்களுக்கான வர்ணப்பூச்சு போன்றவை உள்ளடங்குகின்றன. இதன்மூலம் இலங்கையிலுள்ள வர்ணப்பூச்சு வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன. 

2002ஆம் ஆண்டு ISO 9000 தரச் சான்றிதழை லங்கெம் பெற்றுக் கொண்டதன் மூலம், இலங்கையின் முதலாவது ISO 9000 சான்றுபடுத்தப்பட்ட வர்ணப்பூச்சு கம்பனி என்ற பெருமையை பெற்றுக் கொண்டது. அதேபோல் எக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கெம் வர்ணப்பூச்சு தொழிற்சாலையே இலங்கையில் தர முகாமைத்துவ முறைமைக்காக முதன்முதலாக SLS ISO 9001:2008 சான்றிதழைப் பெற்றுக்கொண்ட வர்ணப்பூச்சு உற்பத்தி வசதிகளை உடையதாகவும் காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி SLS தர அடையாளத்திற்கு மேலதிகமாக, இன்று வரைக்கும் இலங்கையில் சூழல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள ஒரேயொரு வர்ணப்பூச்சு உற்பத்தியாளர் என்ற பெருமையையும் லங்கெம் நிறுவனம் பெற்றிருக்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X