Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 08 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
Softlogic Holdings PLC நிறுவனத்தின் துணை நிறுவனமாகத் தொழிற்பட்டு வருகின்ற Future Automobiles (Pvt) Limited, தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்துக்கு மூன்று Ford Ranger பிக்-அப் வாகனங்களை அண்மையில் வழங்கியுள்ளது.
திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று Ford Ranger single cab பிக்-அப் டிரக் வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியகம உயிரியல் பூங்காவில் உபயோகிக்கப்படவுள்ளன. 500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூங்கா வலயத்திலுள்ள கரடுமுரடான நிலப்பகுதியில் பணியாளர்கள், விநியோகங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் போக்குவரத்துத் தேவைகளுக்கு அவை உபயோகிக்கப்படவுள்ளன.
Duratorq TDCi 2.2L மற்றும் 3.2L VG Turbo டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள Ford Ranger வாகனங்கள். புதிய 6-speed transmission தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அவை மிகச் சிறந்த வகையில் சுமைகளைக் கொண்டு செல்லக்கூடிய திறனையும், 3,500 கிலோகிராம் எடைக்கும் அதிகமானவற்றை கட்டி இழுத்துச் செல்லும் திறனையும் கொண்டவை. அதன் அடிப்பாகமானது, தரைமட்டத்திலிருந்து அதிக அளவான உயரம் கொண்டதாக அமைந்துள்ளதுடன், 800 மில்லிமீற்றர் தண்ணீரை ஊடுருவிச் செல்லும் திறனையும் கொண்ட Ranger இன் மிகச் சிறந்த முன்னிலைத் தொழில்நுட்பங்கள் கரடுமுரடான நிலப்பரப்பில் அதன் சிறந்த தொழிற்பாட்டை மேம்படுத்துகின்றன. “Built Ford Tough” என்ற மகுட வாக்கியத்துக்கு அமைவாக, பாறையைப் போல கடினமான கீழ்ப்பாகமானது புதிய Ranger வாகனங்கள் நீடித்து உழைப்பதற்கும், அதிக பாரமான அடித்தளத்தைக் கொண்டிருப்பதற்கும் வழிகோலியுள்ளது.
இலங்கையில் 5-star ANCAP பாதுகாப்பு தரப்படுத்தலைப் பெற்றுள்ள ஒரேயொரு பிக்-அப் டிரக் வாகனமாக Ford Ranger திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago