2025 மே 21, புதன்கிழமை

தேசிய தின நிகழ்வுகளை நெதர்லாந்து தூதரகம் அனுஷ்டித்தது

Editorial   / 2018 மே 02 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து தேசிய தினத்தை முன்னிட்டு, Trace Expert City வளாகத்தில் பூக்கள் துறை தொடர்பான விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளில் பூக்கள் ஏற்பாடு போட்டி, கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை போன்றன அடங்கியிருந்ததுடன், இந்த ஆண்டின் தொனிப்பொருளான ‘ராஜாவின் தினம்’ என்பதற்கமைய டச்சு விவசாய தொழிற்பயிற்சி நிலையமான ‘வெல்லன்ட்’ கல்லூரியின் நிபுணர்கள் இந்த ஏற்பாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.  

இந்நிகழ்வு, நெதர்லாந்தின் தேசிய தினம் மற்றும் நெதர்லாந்தின் அரசரான வில்லியம் அலெக்சான்டர் வான் ஒரான்ஜி-நசாவின் பிறந்த தினம் என்பதற்கமையவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நெதர்லாந்து தூதுவர் ஜொஆன் டோர்னேவார்ட், நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பூக்கள் தொடர்பான நிபுணர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நெதர்லாந்து தூதுவர் ஜொஆனின் பிரதான உரையில், “நெதர்லாந்து பூக்கள் துறையில் நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கமான செயற்பாடுகளுக்காகப் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே ஒன்றிணைந்த செயற்பாடுகளில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.  

நெதர்லாந்தின் பூக்கள் அலங்கரிப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச நியமங்களுக்கமைவான நிபுணத்துவ திறனை கட்டியெழுப்பும் அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.   

டச்சு பொருளாதாரத்தின் அடையாளமாக பூக்கள் வளர்ப்புத் துறை காணப்படுகிறது. சர்வதேச பூக்கள் வளர்ப்பு, தயாரிப்புகளில் உலக சந்தையின் 50 சதவீத பங்கை, நெதர்லாந்து தன்வசம் கொண்டுள்ளது. 1970கள் முதல் இந்தத்துறை சிறப்பானதாக அமைந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .