S.Sekar / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் மற்றும் கொழும்பில் மர நடுகைத் திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுத்திருந்தது. ‘தூய வளி மற்றும் உரத்தினூடாக நாட்டுக்கு வளமூட்டுவோம்” எனும் தொனிப்பொருளுக்கமைய, நாடு முழுவதிலும் மர நடுகைத் திட்டத்தை SLT-MOBITEL ஆரம்பித்திருந்தது. எமது வளியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பச்சைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து, ஆரோக்கியமான மண் வளத்தையும், இயற்கை ஈரப்பதக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்கான உறுதிமொழிக்கமைய இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது.

தேசிய நாமல் பூங்கா சர்வதேச பௌதீகவியல் அமைப்பின் 31 ஆவது ஆண்டு பூர்த்தியுடன், கொழும்பில் மர நடுகைத் திட்டம் இடம்பெற்றது. Sat Co Lanka Technology (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான எச்.எம்.பைசல் தீன், இந்தத் திட்டத்துக்கு அவசியமான இலுப்பை மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
இந்தத் திட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், SLT-MOBITEL இனால் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி வளாகத்தில் இலுப்பை மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. அனுராதபுரத்தைச் சேர்ந்த மக்களுக்கு SLT-MOBITEL அதிகாரிகளிடமிருந்து இலுப்பை மரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
களை கட்டுப்பாட்டில் ஆற்றும் பங்களிப்பு, சேதன உரத் தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய திறன், வளியை தூய்மைப்படுத்தும் திறன் மற்றும் இயற்கை மூலிகையாக பயன்படுத்தக்கூடியமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்தத் திட்டத்துக்காக இலுப்பை மரம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 'THURU' மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இது போன்ற திட்டங்களினூடாக சூழல் பாதுகாப்புக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதில் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கையை கொண்டிருப்பதுடன், சூழல் சமூக ஆளுகை (ESG) தொடர்பில் நிறுவனத்தின் செயற்பாடுகள் விரிவாக்கம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பெருமளவு இணைக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை பேணுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.
31 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago