Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 நவம்பர் 22 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரோக்கியமான தேசத்துக்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறும் உலக AMR விழிப்புணர்வு வார (WAAW) நிகழ்வில் உறுதிமொழியில் கைச்சாத்திட்டது.
அண்மையில் குழுமத்தின் ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், சுகாதார துறை நிபுணர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எமில் ஸ்டான்லி வரவேற்று உரையை ஆற்றியிருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வில் பிரதான வளவாளராக பங்கேற்ற கலாநிதி. கிஷானி தினபால அவர்களின் விளக்கங்களும் முன்னெடுக்கப்பட்டன.
நியு அந்தனீஸ் குரூப் முன்னெடுக்கும் WAAW-இல் கவனம் செலுத்தும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்ததுடன், AMR க்கு எதிராக திரண்ட நடவடிக்கையையும், “ஒரு சுகாதாரம்” வழிமுறையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்ததுடன், இது மனிதன், விலங்கு மற்றும் சூழல் சுகாதார செயற்பாடுகளை ஒன்றிணைப்பதாகவும் அமைந்திருந்தது.
தமது ஒழுக்கமான மற்றும் நிலைபேறான செயற்பாடுகளுக்காக நன்கறியப்பட்ட துறைசார் முன்னோடிகளாக நியு அந்தனீஸ் திகழ்வதுடன், ஐந்து வருடங்களுக்கு மேலாக நுண்ணுயிர்தவிர்ப்பு அற்ற கொள்கையை பின்பற்றிய வண்ணமுள்ளது. நாட்டில் இவ்வாறான கொள்கையை பின்பற்றும் ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக திகழ்கின்றமையையிட்டு பெருமை கொள்கின்றது. இந்த விடயத்துக்கான நியு அந்தனீஸ் நிறுவனத்தின் உறுதி மொழி என்பது எப்போதும் தொடர்ச்சித் தன்மை வாய்ந்ததாகவும், தனது இதர பல முயற்சிகளிலும் நுண்ணுயிர் தவிர்ப்பு அல்லாத உற்பத்தி முறைமையை பேணுவதாகவும் அமைந்திருந்தது. இதனால் இலங்கையில் மிகவும் பாதுகாப்பான கோழி இறைச்சி உற்பத்தியாளர் எனும் கீர்த்தி நாமத்தையும் பெற்றுள்ளது.
நிறுவனம் தனது செயற்பாடுகளின் போது நுண்ணுயிர் தவிர்ப்பு தடைக்கு (AMR) எதிராக போராடுவதில் உறுதியாக இருந்துள்ளது. முற்றிலும் இயற்கை கோழி இறைச்சி உற்பத்திக்கு முன்னுரிமை வழங்குவதுடன், அமெரிக்காவின், தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தின் நியமங்களை பூர்த்தி செய்யும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலன்புரி செயற்பாடுகளை பின்பற்றுகின்றது.
நியு அந்தனீஸ் “கிறீன் கட்டளைகள்” என்பது தனது உற்பத்திச் செயன்முறையில் சகல கட்டங்களிலும் நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்ணையிலிருந்து முள்ளுக்கரண்டி வரையான சகல செயற்பாடுகளிலும், நுண்ணுயிர் தவிர்ப்பு இன்மை செயற்பாடுகளை கடுமையாக பின்பற்றல், நுகர்வோர் உயர் தரம் வாய்ந்த, பாதுகாப்பான கோழி இறைச்சி தயாரிப்புகளை பெறுவதை உறுதி செய்தல் போன்றன இதில் அடங்கும். இயற்கையாகவே உக்கும் பொதியிடல் தீர்வுகளை பயன்படுத்தி, கழிவை குறைத்தல் மற்றும் சூழல்கட்டமைப்புகளில் ஏற்படும் தாக்கத்தை தணித்தல், ISO நியமங்களின் பிரகாரம் பச்சை இல்ல வாயு வெளியேற்றங்களை கண்காணித்து நிர்வகித்தல் மூலம் காபன் வெளியீட்டை குறைத்தல், நிலைபேறான வகையில் பெறப்பட்ட U.S. சோயா போன்றன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல செயற்பாடுகளில் சிலவாகும்.
உறுதியளிக்கப்பட்ட நுண்ணுயிர் தவிர்ப்பு அற்ற பரந்தளவு தயாரிப்புகளினூடாக, இலங்கையில் புரத பற்றாக்குறையை தீர்ப்பதில் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. நாடு முழுவதையும் சேர்ந்த சமூகங்களுக்கு உயர்-போஷாக்கான உணவு மூலம் வழங்கப்படுகின்றது. WAAW இன் உறுதி மொழியான “அறிவூட்டல், செல்வாக்கு செலுத்தல், உடன் செயலாற்றல்” என்பதற்கமைய, ஊழியர் ஈடுபாடு, பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிற்சிப்பட்டறை மற்றும் உள்ளூர் பாடசாலையில் விழிப்புணர்வு அமர்வுடன், நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை நன்கொடையாக வழங்கியமை போன்ற பல இதர செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.
நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் நியு அந்தனீஸ் குரூப், தனது முன்னோடியான சாதனைகளுக்காக பெரிதும் அறியப்படுகின்றது. இதில் FSSC 22000 சான்றிதழ், கட்டுப்பாட்டு ஒன்றியத்தின் பச்சை இல்ல வாயு (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கை மற்றும் பல்வேறு இதர சான்றிதழ்களான GMP, HACCP, ISO 22000 மற்றும் ஹலால் சான்றிதழையும் பெற்றுள்ளது. தனது தயாரிப்பு வழங்கல்களில் மற்றும் கிடையான ஒன்றிணைப்பு போன்றவற்றில் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கான திட்டங்களினூடாக ஏற்கனவே பயன்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளதுடன், இலங்கையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
3 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
10 minute ago