2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நெனோ பாதுகாக்கும் பூச்சு அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள ஒவ்வொரு வீடுகளும், தமது அழுக்கான வீட்டுப்பொருட்களின் மேற்பரப்புகளை சிறந்த முறையில் பாதுகாக்கக்கூடிய நெனோ தொழில்நுட்பம் சார்ந்த நெனோரெபெல் பூச்சினை எகோகோர்ப் ஏசியா டுடே அறிமுகப்படுத்தியுள்ளது.  

ஜேர்மனியின் நெனோ தொழில்நுட்பம் சார் இப்பூச்சினை நீங்களே உங்கள் மேற்பரப்புகளுக்குப் பூசக்கூடியதாக உள்ளமை இதன் விசேடத்துவமாகும்.  

இப்பூச்சு, நம்பமுடியாத அளவுடைய மெல்லிய அடுக்குகளைக் கொண்ட “திரவக் கண்ணாடி” அல்லது குவார்ட் கண்ணாடி மேற்பரப்பிலான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பூச்சானது வெப்பநிலை எதிர்ப்பு அல்லது அமிலங்கள் மற்றும் கார எதிர்ப்பு மற்றும் இவ்வடுக்குள் அதிகபட்ச நெகிழ்வுதன்மை மற்றும் விரிவுத்தன்மையுடையதுடன், பிசின் எதிர்ப்பு தன்மை கொண்ட காரணத்தினால், அழுக்கு போக்கும் பண்புகளுடன் மேற்பரப்புகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றது.  

மேலும், நீர் மற்றும் காரமற்ற சலவை தூள்களின் உதவியுடன், அழுக்கு நீக்கி இம்மேற்பரப்பை புதியதுபோல், அசல் தோற்றத்துக்குக் கொண்டு வரலாம் என்பது முக்கிய அம்சமாகும்.  

Ecocorp ஏசியா டுடே நிறுவனமானது வாகன மேற்பரப்பு பூச்சு, வீடுகள் மற்றும் வெளிப்புற பூச்சு என்று மூன்று வகையான தயாரிப்புக்களுடன், பூச்சுகளுக்கான சுத்தப்படுத்திகளையும் இறக்குமதி செய்கின்றது. மணமற்ற இப்பூச்சினை சுத்தம் செய்தல், ஸ்பிரே தெளித்தல், பாதுகாத்தல் எனும் 3 படிமுறைகளில் நீங்களே இலகுவாக பூசிப் பாதுகாக்கலாம்.  

நெனோரெபெல் தொழில்நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தி வைத்ததைப் பற்றி நெனோரெபெல் புஹடிர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சாஸ்சா செவிண்ட் கருத்து தெரிவிக்கையில், “21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திகள் என்று கூறும்போது நெனோ தொழில்நுட்பங்களானது, அசுற வேகத்தில் வளர்ச்சி காண்கின்றமை பிரமிக்க வைக்கின்றன. அந்த வகையில், நெனோதொழில்நுட்ப தயாரிப்பு வரிசையில் நுகர்வவோருக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சிறந்த தீர்வளிக்கக்கூடிய தயாரிப்புக்களை எம்மால் வழங்க முடியும்.

உடன்பயன்படுத்தக்கூடிய தயார் நிலையிலுள்ள இத்தயாரிப்பை இலங்கைக்கு கொண்டு வரக்கூடிதாய் இருந்தமை மற்றும் இதனூடாக இலங்கையிலுள்ள நுகர்வோரர் பலனடையக் கூடியதாய் உள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது” என தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X