2024 மே 18, சனிக்கிழமை

பட்டதாரி மாணவர்களுக்கான கொள்கை கற்கைகள் நிறுவனத்தின் போட்டி

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைமுறை பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை சமர்பிப்பதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்துவதை இலக்கு வைத்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கான கொள்கை கள போட்டியை இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனம் (IPS) அறிவித்துள்ளது. வெற்றியாளருக்கு பணப்பரிசு வழங்கப்படுவதுடன் இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனத்தின் (IPS) Talking Economics என்ற உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் தங்களுடைய கொள்கை சிந்தனை காட்சிப்படுத்தப்படும். மேலும், ஏனைய அதிகமாக கருத்துரைக்கப்பட்ட சிந்தனைகள் இணையதளத்தில் வெளியீடும் செய்யப்படும்.

'கொவிட் - 19 தொற்று நோயிலிருந்து இலங்கை மீண்டெழுந்துள்மையினால், நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான கொள்கை முன்னுரிமைகள் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது என கலாநதி துஸ்னி வீரகோன், இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனத்தின் (IPS) நிறைவேற்றுப் பணிப்பாளர், கருத்துரைத்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பிரதான வகிபங்கினை இலங்கை இளைஞர்கள் கொண்டுள்ளனர் அத்தோடு செவிமடுக்கப்படும் அவ்வாறான வாய்ப்புக்களை வழங்குவதற்கு இந்த போட்டி இலக்கு வைக்கின்றது'

உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி பயில்கின்ற சகல இலங்கை கீழ் நிலை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கும் கொள்கை கள போட்டியில் பங்குபற்ற முடியும். 'இலங்கை: பொருளாதார நிலைமை': (1) பெரும்பாக பொருளாதாரங்கள், வர்த்தகம் மற்றும் போட்டித்தன்மை: (2) சுகாதாரம், கல்வி மற்றும் தொழிலாளர் (3) குடிபெயர்வு மற்றும் நகரமயமாக்கல்: (4) வறுமை மற்றும் சமூக நலன்புரி: (5) விவசாயம் மற்றும் விவசாய தொழில்முயற்சி அபிவிருத்தி: மற்றும் (6) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் என்ற இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனத்தின் (IPS) வருடாந்த பிரதான வெளியீடுகளின் பிரதான பரப்புக்களாக இருக்கின்ற ஆறு தலைப்புக்களில் ஏதாவதொன்றின் கீழ் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.

நடைமுறையில் உள்ள கொள்கையை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்து, தற்பொழுதைய நிலைமை ஏன் சிறப்பாக செயற்படுவதில்லை என்பதை விளக்கி பிரச்சினைகளுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுவொன்றை சமர்ப்பிப்பதற்கு பங்குபற்றுநர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு கொள்கை சிந்தனைகளும் மூன்று சிரேட்ட ஆய்வாளர்கள் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்படும். உங்களுடைய விண்ணப்பங்களை 2021 ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரை

அனுப்ப முடியும். வெற்றியாளர் மற்றும் பிற உயர் கருத்துரைக்கப்பட்ட சிந்தனைகள் பற்றி செப்தெம்பர் மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும். பங்குபற்றுநர்கள் தங்களுடைய சிந்தனையினை அபிவிருத்தி செய்வதற்கு முன்னர் விதிமுறைகளை கவனமாக வாசிக்குமாறு சகல பங்குபற்றுநர்களுக்கும்; ஆர்வமூட்டப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .