Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையான பணவீக்கமானது குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 3.2 சதவீதமாக இருந்த பணவீக்கம், மார்ச் மாதம் 2.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணத்திற்கான பங்களிப்புக்கள் முறையே 1.2 சதவீதம், 1.6 சதவீதமாக இருந்த, அதேவேளை 8.6 சதவீதம் முதன்மைப்பணவீக்கத்தின் பெறுபேறாக 2017 மார்ச் மாதத்தில் பணவீக்கத்திற்கான இந்த இரு பிரிவுகளினதும் பங்களிப்புக்கள் முறையே 4.9 சதவீதம் மற்றும் 3.8 சதவீதமாக காணப்பட்டன.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மாதம் மீது மாத மாற்றங்களை ஒப்பிடுகையில் 2018 பெப்ரவரி மாதத்தில் பதிவாகிய 123.7 இலிருந்து 2018 மார்ச் மாதத்தில் 122.8 குறைவடைந்துள்ளது.
இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.9 சுட்டெண் புள்ளி அதாவது 0.7 சதவீத புள்ளி குறைவாகும். இதற்கான காரணம் உணவுப்பொருட்களின் செலவுப்பெறுமதி 0.80 சதவீதத்தால் குறைவடைந்தமையும் உணவல்லாப் பொருட்களின் செலவுப்பெறுமதி 0.08 சதவீதத்தால் அதிகரித்தமையும் பிரதான காரணம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 minute ago
39 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
41 minute ago