Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தையில் தலைமை தாங்கும் செலிங்கோ லைஃப் பண்டாரவளையில் அதன் சொந்தக் காணியில் சுற்றாடலுக்கு இசைவான புதிய நான்கு மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. பதுளை மாவட்டத்தில் தனது பிரசன்னத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பின் மீதான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8800 கதுர அடி பரப்பளவு கொண்ட இந்தப் புதிய கட்டிடம் 327 பதுளை றோட் பண்டாரவளை என்ற முகவரியில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் ஐந்து உப கிளைகளுக்கு இங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் விற்பனை சாரா ஊழியர்கள் இங்கு கடமை புரிவர். வுhடிக்கையாளர்களுக்கான போதிய வாகன தரிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தின் சக்திவளம்; முற்றாக சூரிய சக்தி மூலம் பெறப்படுகின்றது. சக்தி ஆற்றல் கொண்ட குளிரூட்டல் வசதிகள், குறைந்தளவு மின்சாரத்துடன் பூர்த்தி செய்யக் கூடிய மின் ஒளி வசதிகள் என்பனவும் இங்கு உள்ளன. சுத்தம் செய்யும் அறைகளுக்கான தண்ணீர் வசதி மழை நீர் சேமிப்புத் திட்டம் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. சுத்திகரிப்பு பொறிமுறை ஒன்றின் மூலம் தண்ணீர் இங்கு மீள் சுற்றின் அடிப்படையிலும் பாவிக்கப்படுகின்றது. இதன் மூலம் அயல் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் தடுக்கப்படுவதாகவும் கம்பனி அறிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையில் ஒரே நேரத்தில் 50 பேர் பங்கேற்கக் கூடிய மாநாட்டு மண்டப வசதியும் இங்கு உள்ளது.
பண்டாரவளையில் இந்த அதிநவீன கட்டிடத்தின் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் பண்டாரவளை, பதுளை, வெலிமடை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி கம்பனி ஒரு ஓவியப் போட்டியை நடத்துகின்றது. இந்த ஓவியப் போட்டிக்காக கிடைக்கும் ஓவியங்கள் இந்தக் கட்டிடத்தில் செப்டம்பர் மாதம் வரை காட்சிக்கு வைக்கப்படும்.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் ஆகக் கூடிய கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள செலிங்கோ லைஃப் நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 142 நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமங்களில் தனது செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.
செலிங்கோ லைஃப் ஏற்கனவே அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, களுத்துறை, குருணாகல், கம்பஹா, மாத்தறை, காலி, திஸ்ஸமகாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தனக்கு சொந்தமான காணிகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. தனது சொந்தக் காணியில திருகோணமலையிலும், வென்னப்புவையிலும் கிளைக் கட்டிடங்களை நிர்மாணித்து வருகின்றது.
இலங்கையின் மிகச் சிறந்த வர்த்தக முத்திரைகளுள் ஒன்றாக சுயாதீனமான முறையில் தரப்படுத்தப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004ம் ஆண்டு முதல் நாட்டின் நீண்ட கால காப்புறுதி துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. வர்த்தக சமநிலையைக் கட்டியெழுப்பல் மற்றும் சமூக அர்ப்பணங்கள் என்பனவற்றுக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு வகையான விருதுகளையும் அது வென்றுள்ளது.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago