2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பத்தாண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் வெல்வட்

A.P.Mathan   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நூறு சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்வட் அறிமுகத்தோடு இலங்கையின் அழகு சவர்காரத் துறையில் புதிய சகாப்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்த மற்றும் மிருதுவாக்கும் மிகச்சிறந்த உற்பத்தி எனும் ரீதியில், இன்று அதன் ஆடம்பரமான வரலாற்றையும், அபிமானத்தையும் வெல்வட் கொண்டாடுகிறது.

தன்னை அழகாக காட்டிக்கொள்ளவும், வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் விரும்பும் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் தொடர்பில் ஆழமான புரிதலை வெல்வட் கொண்டுள்ளது. நியாயமான உரையாடல்கள், புத்தாக்கம் மற்றும் நீடித்த பாரம்பரியம் ஊடாக வெல்வட் உலகத்தரத்தை பேணும் அதேவேளை, உண்மையான உள்நாட்டு உற்பத்தியை வழங்கி வாடிக்கையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்த வண்ணமுள்ளது.

இதற்கு முன்னைய ஆண்டுகளில் இலங்கை சந்தைப்படுத்தல் ஆய்வு பணியகத்தின் (LMRB) வீட்டு பெனல் வேலைத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, போட்டிமிக்க அழகு சவர்க்கார பிரிவில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தகநாமங்கள் மத்தியில் இலங்கையில் முதலிடத்தில் உள்ள அழகுசவர்க்காரம் எனும் பெருமையை பெற்ற வெல்வட் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போதும் அதன் ஸ்தானத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

'இன்றைய காலத்தில் தேசத்தின் விருப்பத்துக்குரிய அழகு சவர்க்காரம் எனும் ஸ்தானத்தை அடைந்துள்ள எமது உள்நாட்டு வர்த்தகநாமத்திற்கு பத்தாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக திகழ்கிறது. வர்த்தகநாமத்துடன் வலுவான தொடர்பினையும், இத்தகைய மகத்தான வெற்றியை வெல்வட் அடைவதற்கும் உதவிய எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என ஹேமாஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் அனுஷ்கா சபாநாயகம் தெரிவித்தார். 

அத்தியாவசிய சரும பராமரிப்பு மூலப்பொருட்களுடன், விற்றமின் A, C, மற்றும் E மொய்சரைஸர் சேர்க்கையுடன் மிருதுவான, ஆரோக்கியமான சருமத்;தை வழங்கும் வெல்வட்டின் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. இந்த மூலப்பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியான குளியல் அனுபவத்தை உறுதி செய்கிறது.

'ஒவ்வொரு பெண்களுமே தன்னை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டிக்கொள்ள விரும்புவதை நாம் அறிவோம். தீவிரமான ஆராய்ச்சிகள் மற்றும் பராமரிப்பு ஊடாக உற்பத்தி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சவர்க்காரமான வெல்வட் சொகுசான குளியல் அனுபவத்தை வழங்குகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

வெல்வட் உற்பத்தி தெரிவுகளுள் இளமையான சருமத்திற்கு ரோஜா மற்றும் மாதுளம், போசாக்கான சருமத்திற்கு பால் மற்றும் பாதாம், பளபளப்பான சருமத்திற்கு சந்தனம் மற்றும் மரமஞ்சள், பொலிவான சருமத்திற்கு வேப்பிலை மற்றும் கற்றாளை மற்றும் பிரகாசமான சருமத்திற்கு பர்ப்பள் லோட்டர்ஸ் மற்றும் லெவண்டர் போன்ற தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன. மேலும் குளியல் நேரத்தினை வெறும் தூய்மைபடுத்தும் அனுபவமாக மட்டுமன்றி, சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் வகையில் நீர் லில்லி மற்றும் கடல் தாதுக்கள் எனும் புதிய தெரிவினை அண்மையில் வெல்வட் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கையர் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களினால் பாராட்டப்படக்கூடிய ஒரு வர்த்தகநாமத்தை நாம் உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமையவே எமது அனைத்து தெரிவுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன' என அனுஷ்கா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சந்தையில் வர்த்தகநாமத்தின் சக்தி மற்றும் செல்வாக்கு தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2014 இலங்கை வர்த்தகநாம சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் வர்த்தகநாம மேன்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வர்த்தகநாமம் எனும் விருதை வெல்வட் வென்றெடுத்தது. அதே விருதுகள் விழாவில் வருடத்திற்கான சிறந்த உள்நாட்டு வர்த்தகநாமம் மற்றும் வருடத்திற்கான சிறந்த உற்பத்தி வர்த்தகநாமம் விருதுகளையும் தனதாக்கிக் கொண்டது.

நுகர்வோருக்கு மிகவும் சகாயமான வகையில் குடும்ப பொதிகளை உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்த முதலாவது அழகு சவர்க்காரமாக வெல்வட் விளங்குகிறது. சந்தை முன்னோடி மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர் எனும் அதன் ஸ்தானத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதுடன், வாடிக்கையாளர்களின் மாற்றமடையும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய தெரிவுகளை அறிமுகம் செய்ய வெல்வட் எதிர்பார்த்துள்ளது. 'ஹேமாஸ் நிறுவனமாகிய நாம், எமது நுகர்வோருக்கு அவர்களது வாழ்க்கைமுறையை பூர்த்தி செய்ய உதவிடும் உற்பத்திகளை வழங்கி அவர்களை மேம்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறோம். வெல்வட்டின் வெற்றிப்பயணத்தில் நாம் ஆய்வுகள் மீது அதிக முதலீடுகளை செய்துள்ளதுடன், நுகர்வோர் வழங்கல்களுக்கு மேலும் பெறுமதி சேர்க்க எதிர்பார்த்துள்ளோம்' என அனுஷ்கா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X