Freelancer / 2024 செப்டெம்பர் 27 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் திறமைசாலிகளுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகைமைகளை வழங்கி பங்களிப்பு வழங்கும் முயற்சிகளின் அங்கமாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை உயர் கல்வி வலையமைப்பாக திகழும் ESOFT Metro கம்பஸ், LEAP மையத்துடன் இணைந்து, நாடு முழுவதையும் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ரூ. 55 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.

வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், சட்டம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவைகள் மற்றும் நிலஅளவையியல் போன்ற பிரிவுகளில் முழுமையான மற்றும் அரைப்பகுதி கற்கைகள் கட்டணத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் இந்தப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. தமது கற்கை காலப்பகுதியில் தமது கட்டணத்தில் முழுமையான விலக்கழிப்பை இந்த மாணவர்கள் அனுபவிப்பதுடன், அரைப்பங்கு புலமைப்பரிசிலை பெற்றவர்களுக்கு, தமது மொத்த கற்கைச் செலவில் 50 சதவீதத்தை மாத்திரம் செலுத்த வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு தமக்கான தகைமைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதுடன், வழங்கப்பட்ட தொகையை வட்டியின்றி மீளச் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. தமது கற்கையை பூர்த்தி செய்து ஒரு வருடத்தின் பின்னர் மீளச் செலுத்தலை ஆரம்பிக்கும் நெகிழ்ச்சித்தன்மையை மாணவர் கொண்டிருப்பர். முழுத்தொகையும் மூன்று முதல் ஐந்து வருட காலப்பகுதியினுள் மீளச் செலுத்தப்பட வேண்டும்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. பிரதான உரைகளை LEAP மையத்தின் ஸ்தாபக தலைவரும், ESOFT Metro கம்பஸ் தவிசாளர் /குழும முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. தயான் ராஜபக்ச மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
LEAP மையம், “பயிலல், சம்பாதித்தல் மற்றும் செலுத்தல்” ("Learn, Earn, and Pay") எனும் கொள்கையின் பிரகாரம் வழிநடத்தப்படுவதுடன், இதனை ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக, மாணவர்களின் கற்றலுக்கு ஆதரவளிக்கும் வகையில் சுய நிலைபேறான கட்டமைப்பை ஏற்படுத்த இதர நிறுவனங்கள் மற்றும் பங்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில், கலாநிதி. தயான் ராஜபக்ச நிறுவியிருந்தார். இதனூடாக பட்டதாரிகளுக்கு தொழிலுக்கு தம்மை தயார்ப்படுத்தவும், அவசியமான திறன்களை கொண்டிருக்கவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முகங்கொடுக்கவும் தயார்ப்படுத்தவும் உதவியாக அமைந்திருந்தது.
LEAP மையத்தினால், உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் சகல பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் நிபுணத்துவ அமைப்புகளுக்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக இலங்கையின் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அங்கம் வகிக்குமாறு அழைத்துள்ளது. உங்கள் நிதியளிப்பு மற்றும் ஆதரவு போன்றன LEAP மையத்துக்கு, தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளை மேலும் மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
29 minute ago
38 minute ago