2025 மே 19, திங்கட்கிழமை

பிரன்டிக்ஸ் கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கும் வகையில் பிரன்டிக்ஸ் முன்னெடுக்கும் ‘ரண் தரு திலின’ திட்டத்தை தொடர்ச்சியாக மூன்றாம் வருடமாகவும் முன்னெடுத்திருந்தது.

இதனூடாக புதிய கல்வி ஆண்டுக்காக சுமார் 6,500க்கும் அதிகமான சிறுவர்களுக்கு பாடசாலை பைகள் மற்றும் காகிதாதிகளை அன்பளிப்பு செய்திருந்தது.

2016இல் அறிமுகம் செய்யப்பட்டது முதல், ‘ரண் தரு திலின’ மூலமாக பிரன்டின்ஸில் பணியாற்றும் ஊழியர்களின் முன்பள்ளி வயது முதல் தரம் 5 வரை பயிலும் 20,000க்கும் அதிகமான சிறுவர்களின் வாழ்க்கையை வளமூட்டும் வகையிலான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தரம் 3 முதல் 5 வரையில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை பையுடன், அப்பியாசக் கொப்பிகள், சித்திரக் கொப்பி, வர்ண மற்றும் சாதாரண பென்சில்கள், அடிமட்டம், பசை, இதர அத்தியாவசிய காகிதாதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. இந்த வயது மட்டத்தை விட குறைந்தவர்களுக்கு பாடசாலை பையுடன், கிளே, கத்தரிக்கோல் மற்றும் கிரேயோன்கள் போன்றன வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு, பிரண்டிக்ஸில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு அவர்களின் நிலையங்களில் இடம்பெற்றன. குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக ‘ரண் தரு திலின’ அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X