Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 16 , மு.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (PLC) அம்பாறை கிளை மூலமாக, அம்பாறை மாவட்ட செயலகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பயிற்சி நிகழ்வை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்தது.
இந்தப் பயிற்சிகளைச் சிறுவர்களுக்கு நட்பான ஆரம்ப பயிலல்கள், பரிபூரண விருத்தியுடனான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான சிறுவர்களைத் தயார்ப்படுத்தும் விஞ்ஞான ரீதியான வழிமுறை போன்ற தலைப்புகளில் புகழ்பெற்றவரால் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 255 முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியினூடாக அனுகூலம் பெற்றிருந்தனர்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி அம்பாறை கிளை முகாமையாளர் தனுஜ தினேஷ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை பொருளாதார மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த மாற்றத்துக்கு பங்களிப்பு வழங்குவதில் நாட்டின் மனித மூலதனம் முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.
“சிறுவர்களை அவர்களின் சிறுபராயத்தில் சிறந்த முறையில் தயார்படுத்துவதனூடாக, எதிர்காலத்தில் நாட்டுக்குச் சிறந்த குடிமகன்களை உருவாக்குவதற்கு உதவியாக அமையும். எமது சிறுவர்கள் புத்தாக்கமானவர்களாகவும் உறுதியான தலைமைத்துவம் மற்றும் தொடர்பாடல்த் திறன்களைக் கொண்டவர்களாகவும் இருப்பதனூடாக, இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
“இந்த ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்பள்ளி ஆசிரியர் அதிகளவு பங்களிப்பை வழங்குவார். பீப்பள்ஸ் லீசிங்கைப் பொறுத்தமட்டில், நாம் இந்த விடயம் தொடர்பில், பெருமளவு பொறுப்பை ஏற்பதுடன், இதன் காரணமாக பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி அம்பாறை கிளை, இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்க முன்வந்திருந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago