2025 மே 01, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2024 ஒக்டோபர் 04 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில் துறையால் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் புதுக்குடியிருப்பு நகரில் கொமர்ஷல் வங்கியின் அண்மைய கிளை திறக்கப்பட்டதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த வங்கிச் சேவைகள் இந்நகரை வந்தடைந்துள்ளன.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்ஸீன், முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றதிகாரி சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் மற்றும் சிரேஷ்ட மற்றும் பெருநிறுவன முகாமைத்துவத்தின் உறுப்பினர்கள் இந்தக் கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

1 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவில் அமைந்துள்ள புதிய கிளையானது, கடன் பிரிவு மற்றும் நகை அடகு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகளுடன், தன்னியக்க பணம் பெறும் இயந்திரம் (ATM) மற்றும் பண மீள் சுழற்சி இயந்திரம் (CRM) உட்பட முழு நேர அணுகலுடன் முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்கவுள்ளது.

கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 974 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்ஸீன், முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் ஆகியோர் புதிய கிளையைத் திறந்து வைப்பதை படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .