Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
S.Sekar / 2022 மே 09 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அறிவை வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்து, பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக சூழல் நலன் இலக்குடன் தனது தனித்துவச் செயற்திட்டமான “Bairaha Help to Learn” நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து ஊழியர்களின் பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் இந்த செயல்திட்டம் ஆதரவை வழங்குகிறது. இதன் விளைவாக, தற்போது நாடளாவிய ரீதியில் தரம் ஒன்று முதல் 13 வரை கல்வி கற்கும் ஊழியர்களின் பிள்ளைகளான ஏறக்குறைய 600 மாணவர்கள் இந்த வருடாந்த முயற்சியின் மூலம் பைரஹாவின் வர்த்தகநாமமிடப்பட்ட பாடசாலைப் புத்தகப் பைகள் மற்றும் காகிதாதிகள் அடங்கிய அன்பளிப்புப் பொதிகளைப் பெற்றுள்ளனர்.
அதேசமயம், ஒருபுறம் நாட்டின் எதிர்கால சிற்பிகளை வளர்க்கும் அதே வேளையில், பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி, 2022 ஆம் ஆண்டின் விடியலைக் கொண்டாடும் வகையில், தனது ஊழியர்களுக்கு தனித்தனியாக சிறிய தொட்டிகளில் வளர்க்கப்பட்ட வீட்டுச் செடிகளை அன்பளித்து, சுற்றுச்சூழல் உணர்வுள்ள மனப்பான்மையை குடிமக்கள் மத்தியில் ஊக்குவிப்பதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த ஒரு நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இயற்கையை மதிக்க வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்திற்காக அதை பொறுப்புடன் பேணிப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை ஊழியர்கள் மத்தியில் வலியுறுத்தும் நோக்கத்துடன் தாவரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான யாக்கூத் நளீம் “பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் சமூக நலன் உணர்வில் நாங்கள் மிகவும் தீவிரமான அக்கறை கொண்டுள்ளோம். அதனாலேயே, பண்ணையின் புத்தம்புதிய தரத்தை மட்டுமல்ல, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஹோர்மோன்கள் அல்லது MSG சேர்க்கை இன்றிய தயாரிப்புகளையும் தக்கவைக்கும் புதிய தயாரிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் தனியாக கவனம் செலுத்துகிறோம். நமது வருங்கால சந்ததியினரின் சிந்தனைகளை வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டியதும் அதே அளவு முக்கியமானது. அவர்களின் கல்விப் பயணத்தில் பங்கெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், 2018 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணப் பொருட்களை வழங்குவதில் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறோம். ஆனால் நாம் வாழுகின்ற பூமி ஆரோக்கியம் இல்லையென்றால் ஏனைய இவை அனைத்தும் வீணானவை. அந்த உணர்வில்தான் நாம் அனைவரும் அங்கம் வகிக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நிலைபெறச்செய்யவும் தேவையான முடிந்தளவு ஆனால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Bairaha Help to Learn செயல்திட்டம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600 மாணவர்களுக்கு உதவி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும், பைரஹா ஃபார்ம்ஸின் தொழிற்பாட்டு இடங்களில் ஒன்றில் நடைபெறும் வருடாந்த நிகழ்வின் மூலம் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மிகவும் தேவையான பாடசாலை உபகரணப் பொருட்கள் அன்பளிக்கப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு முதல், ஆனமடுவ, நிக்கவெரட்டிய, ஹிரிபிட்டிய மற்றும் பஸ்யாலவில் உள்ள அதன் பதப்படுத்தும் ஆலையிலும் கூட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அன்பளிப்பு விழாவுக்கான இடமாக பஸ்யாலயில் உள்ள பதப்படுத்தும் தொழிற்சாலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago