2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பைரஹா இணையத்தளம் புதுப்பிப்பு

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தையும், இலகுவான சேவையையும் வழங்குவதற்காக தனது இணையத்தளத்தை அண்மையில் மீள்வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தங்குதடையின்றிய இணைய வழி கொள்வனவு அனுபவத்தை வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புக்களை கொள்வனவு செய்யும் குடும்பங்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்துடன் நிறுவனம் சீரான அடிப்படையில் உள்நாட்டு சந்தைப் பங்கைப் பேணி வரும் அதே வேளையில், அதன் இணையத்தளத்தை மறுசீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி வாடிக்கையாளர்களுக்கு இணைய உலாவல் மற்றும் கொள்வனவு செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலமாக அவர்கள் கோழி இறைச்சி மற்றும் தொடர்புபட்ட ஏனைய தயாரிப்புக்களை இணையத்தின் வழியாக எளிதாக கொள்வனவு செய்ய முடியும்.

'நாட்டின் தற்போதைய சூழ்நிலையை நாங்கள் விரைவாக உணர்ந்து எம்மை மாற்றியமைத்தோம். அதிகரித்து வரும் எண்ணிக்கையில் நுகர்வோர் இணைய வழிமுறைகளைப் பயன்படுத்தி விரைவாக கொள்வனவு செய்ய விரும்புவதால், பயனர்களுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், அனைத்து சாதனங்களுக்கும் இணக்கமான ஒரு நுழைமுகத்தை உருவாக்க விரும்பினோம். அதே நேரத்தில் போதிய தகவல் விபரங்களை வழங்குவதுடன், மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்க முற்படும் ஒன்றாக அது அமைய வேண்டும் என்றும் விரும்பினோம்,' என பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான யாக்கூத் நளீம் கருத்து வெளியிட்டார்.

வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் சொந்த கணக்கை உருவாக்கி, தங்கள் கொள்வனவு செய்ய விரும்புகின்ற தயாரிப்புக்களை இணைய கொள்வனவுக் கூடையில் சேர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவு செய்த தயாரிப்புக்கள் அவர்களின் வீட்டுக்கே ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நேரடியாக விநியோகம் செய்யப்படும். பைரஹாவின் உயர் ரக தெரிவான சமைக்காத, தோல் நீக்கப்பட்ட, மசாலா சேர்த்து ஊற வைக்கப்பட்ட, சமைத்த மற்றும் முன்கூட்டியே சமைத்த மதிப்பு கூட்டப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புகள் மற்றும் Cheese Nuggets, Munch மற்றும் Skewers போன்ற பிற பிரபலமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக இணையத்தின் மூலமாக தெரிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

'எமது வர்த்தகநாமமானது 47 வருடங்களாக எமது நுகர்வோருக்கு உயர்தர தயாரிப்புகளை வழங்குவதில் நம்பகமான பெயரைச் சம்பாதித்துள்ளது. மேலும், நாம் தற்போது உள்நாட்டு சந்தையில் பல வழிமுறைகள் மூலமாக எமது தயாரிப்புக்களை வழங்கி வருகிறோம். மறுசீரமைக்கப்பட்ட இணையத்தளத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த இணையதள நுழைமுகமானது வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றும் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான குமரினி கந்தப்பா குறிப்பிட்டார்.

பிரத்தியேக கோழி இறைச்சி சமையல் குறிப்புக்கள், சமையல் உதவிக் குறிப்புகள், அத்துடன் அறிவுபூர்வமான கலந்துரையாடல்கள், கோழி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றிய வலைப்பதிவுகள் மற்றும் கோழி இறைச்சி தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும், ஆழமாகவும் விபரமான உள்ளடக்கத்தைப் பெறலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .