Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 13 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாண்மை வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வை அண்மையில் கொமர்ஷல் வங்கி நடத்தியது. தேசியப் பொருளாதாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை அங்கிகரிக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முதலாவது நிகழ்ச்சி மாத்தறையில் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. தென் பிராந்தியத்தைச் சேர்ந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபடும் 100க்கும் அதிகமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
வர்த்தக அபிவிருத்தி மற்றும் வர்த்தக ஆர்வத்தை தூண்டல் ஆகிய துறைகளில் தலைசிறந்த பேச்சாளரான சந்தன குணவர்தன இதில் வளவாளராகக் கலந்து கொண்டார். வர்த்தக அபிவிருத்தி மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் பங்குபற்றியவர்களை வலுவூட்டும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆண்களுக்கும் பெண்களுக்குமான இவ்வாறான திறந்த வேலைத்திட்டங்களை கொமர்ஷல் வங்கி பரவலாக நாடு முழுவதும் பல பாகங்களில் நடத்தி வருகின்றது. இதுவரை 35 தொழில்முயற்சி ஆற்றல் அபிவிருத்தி மற்றும் ஆற்றல் கட்டமைப்பு வேலைத்திட்டங்களை கொமர்ஷல் வங்கி நடத்தி உள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, தெற்கு, ஊவா, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இவை நடத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் மூலம் 3500க்கும் அதிகமான தொழில் முயற்சியாளர்கள் நன்மை அடைந்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
வங்கியின் 14 விவசாய மற்றும் நுண் நிதி பிரிவுகளின் (AMFUs) ஆதரவோடு இவை நடத்தப்படுகின்றன. இந்தப் பிரிவுகள் அந்தந்தப் பிரதேச மக்களின் விஷேட தேவைகளை இனம் கண்டு அவர்கள் தமது விவசாய அல்லது நுண் வர்த்தக செயற்பாடுகளை அபிவிருத்தி செய்ய உதவுவதோடு விவசாய மற்றும் நுண் நிதி செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் அது தொடர்பான விஷேட உதவிகளை வழங்கவும் அர்ப்பணத்தோடு பணியாற்றுகின்றன.
தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட தொழில்முயற்சி அதிகாரி பிரதீப் திஸாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். கொமர்ஷல் வங்கியின் (தென்) பிராந்திய முகாமையாளர் எஸ்.பி.வாஸல நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். அபிவிருத்தி கடன் திணைக்கள அதிகாரிகள், வங்கியின் கிளை முகாமையாளர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago