2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை கவசங்கள்

S.Sekar   / 2022 ஜனவரி 10 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

பொதுமக்கள் மற்றும்  பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கர  வண்டிகளுக்கு  கொவிட்  வைரஸ் தொற்று  பரவலை  கட்டுப்படுத்துவதற்கான பிஸாஸ்டிக்  பாதுகாப்பு திரை கவசங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

செலான் வங்கியினால்   முன்னெடுக்கப்பட்டு வரும்  சமூகநலன் சார்ந்த  செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் கொரோனா  நோய்தொற்றில் இருந்த  பொதுமக்களையும்,  பாடசாலை மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில்  முன்னாயத்த  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் தொகுதியாக 100 முச்சக்கரவண்டிகளுக்கு இவ் பாதுகாப்பு கவசங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

செலான் வங்கியின் கிழக்குப்   பிராந்திய முகாமையாளர் ரிஸ்னி ஹுஸைன் தலைமையில்  மட்டக்களப்பு செலான் வங்கியில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி  முகாமையாளர் பிறேமினி மோகன்ராஜ் , பிராந்திய செலான் வங்கி  செயல்பாட்டு மேலாளர் பத்மசிறி இளங்கோ,  மட்டக்களப்பு செலான் வங்கி  உதவி முகாமையாளர் ஜெ . ஜெயமேனன் உட்பட வங்கி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .