2021 மே 17, திங்கட்கிழமை

மொபிடெல் ‘நேத்ராபிமான’ வெசாக் கொண்டாட்டம்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல், இந்த வருடம் கொழும்பு நகரில் காட்சிப்படுத்தப்பட்ட ஐந்து வெசாக் பந்தல்களில் பௌத்த கதைகளை கேட்கக்கூடிய வசதியை ஊடாடும் குரல் பதிவு (IVR) தளத்தின் மூலமாக, பார்வை பலவீனமானவர்களும் வெசாக் தின கொண்டாட்டத்தை அனுபவிக்க வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.  

மொபிடெல் நிறுவனம் அதன் ‘We Care, Always’ எனும் குறிச்சொல்லுக்கேற்ப, நாட்டிலுள்ள பார்வையிழந்தவர்களுடன் வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. மிகப் பழைமையான தொடர்பாடல் முறைகளில் ஒன்றான, கதை சொல்லும் முறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்வையிழந்தவர்களும் வெசாக் தினத்தின் மகிமை அனுபவிப்பதற்கான புதுமையான தீர்வினை மொபிடெல் வழங்கியிருந்தது.  

ஸ்ரீ லங்கா விழிப்புலன் இழந்தோர் சம்மேளனத்தின் கண்காணிப்புடன், 50 பார்வை குறைபாடு கொண்டவர்களை 2 சொகுசு பஸ்களில், வெசாக் பந்தல்கள் அமைந்திருந்த இடங்களுக்கு மொபிடெல் கூட்டிச் சென்றிருந்தது. மேலும் ஏனைய வெசாக் அங்கங்களான ‘தன்சல்’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், அலங்கார மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட வீதிகளில் குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். 

பார்வை குறைபாடுள்ளவர்களின் வெசாக் தினத்தை விசேட தினமாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்கிய கிராண்ட்பாஸ், கொத்தடுவ, தெமட்டகொட, பேலியகொட, மெனிங் சந்தை, புறக்கோட்டை மெனிங் சந்தையில் அமைந்திருந்த பந்தல்கள் மற்றும் புறக்கோட்டை மெனிங் சந்தை இராப்போசண தன்சல் போன்றவற்றுக்கு, மொபிட்டல் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டது. ‘நேத்ராபிமான’ ஆரம்ப தினத்தன்று ஸ்ரீ லங்கா விழிப்புலன் இழந்தோர் சம்மேளனத்தின் தலைவர் திரு.நவரத்ன முதியன்ச உரையாடுகையில், “மொபிடெல் முதற்தடவையாக முன்னெடுத்த இந்த முயற்சியானது, குறைந்த அதிர்ஷ்டத்தைக் கொண்ட எம்மைப் போன்றவர்களுக்கான மகத்தான சிந்தனை மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்றார்.  

இலங்கையில் பார்வையிழந்தோர் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் இவர்கள் மீதான சமூகத்தின் அலட்சியத்தை நீக்கும் குறிக்கோளை மொபிடெல் கொண்டுள்ளது. இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் எனும் ரீதியில் மொபிட்டல் ஆனது, உலகம் அவர்களை மறக்கவில்லை என்பதை ஏனைய சமூகங்களுக்கு அறியச்செய்து வருவதுடன், உண்மையான அரவணைப்புடனும் வெசாக் மகிமையுடனும், இலங்கையராக இருப்பதன் சிறப்பை உள்ளடக்கிய அனைத்து நடவடிக்கைகளயும் இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சி மூலமாக, மொபிடெல் நிறுவனம், நாட்டிலுள்ள பார்வையிழந்தோர் உட்பட அனைத்து மக்களுக்கும் சமத்துவம் குறித்தச் செய்தியை வழங்க, அதன் வர்த்தகநாமத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளது. வெசாக் தின நிகழ்வுகள் சந்தோஷத்தை அளித்ததுடன், மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்பதையும் அவர்களின் முக பாவனைகளிலிருந்தே கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .