Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மே 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம், மிகவும் புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம், ஆண்டின் சிறந்த டிஜிட்டல் காப்புறுதி நிறுவனம் மற்றும் 2021ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த டிஜிட்டல் காப்புறுதி புத்தாக்கம் ஆகிய நான்கு பெருமைக்குரிய விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்துள்ளது. குளோபல் பிரான்ட்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சிக்கான தந்திரோபாயத்தைக் கொண்டு, விரிவாக்கம், புதிய தயாரிப்புகள், சேவைகளின் அறிமுகம் மற்றும் புதிய சந்தை உருவாக்கம், தயாரிப்பு மற்றும் சேவையின் உருவாக்கம் அல்லது விரிவாக்கம் போன்றவற்றினூடாக சிறந்த விற்பனை, இலாபம் மற்றும் சந்தைப்பங்குப் பெறுமதிகளை எய்தியிருந்ததுடன், துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியிருந்த நிறுவனங்களை இனங்கண்டு அவற்றை கௌரவிக்கும் வகையில் குளோபல் பிரான்ட் விருதுகள் வழங்கப்படுகின்றன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “துறையில் மாற்றத்தையும் புத்தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்வதாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. டிஜிட்டல் பிரசன்னம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் தீர்வுகளை வழங்குவதனூடாக எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகின்றோம். ஆயுள் காப்புறுதிப் பிரிவில் வழங்கப்படும் சேவைகளை விஸ்தரிக்கக் கூடிய தயாரிப்புகளை நாம் அறிமுகம் செய்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தியுள்ளதுடன், சந்தை உருவாக்கத்தை செயற்படுத்தியுள்ளோம். மேலும், தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட தீர்வுகளுடன் உயர்ந்த சேவைகளை வழங்குவதற்காக எமது அணியினருக்கு நாம் உதவிகளை வழங்குகின்றோம். இந்த சகல செயற்பாடுகளும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளன. துறையில் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியிலும், டிஜிட்டல் மயமாக்கத்தின் வலிமையை பயன்படுத்தி புரட்சிகரமான டிஜிட்டல் தீர்வுகளையும் வரையறைகளற்ற டிஜிட்டல் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவும், பொருத்தமான வகையிலமைந்த சேவைகளை வழங்கவும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறையினூடாக, அதன் தொழிற்பாட்டு மாதிரியில் துரித வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்படுத்தல், கொடுக்கல் வாங்கல்களை மாற்றியமைத்தல் மற்றும் 100% டிஜிட்டல் கட்டமைப்புக்கான பயிற்சி மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தில் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. தொற்றுப் பரவலின் போதும், அதனைத் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறு நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு நிறுவனத்தின் தயார் நிலை உதவியாக அமைந்திருந்தது. ஆயுள் காப்புறுதித் துறையில் புரட்சிகரமான தீர்வுகளை நிறுவனம் அறிமுகம் செய்து வருவதுடன், புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் செயன்முறைகளினூடாக இலங்கையர்களின் உறவுகளை, எதிர்பார்ப்புகளை மற்றும் வாழ்க்கைமுறைகளை பாதுகாக்கும் கொள்கையை நிறைவேற்றுகின்றது.
ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட குளோபல் பிரான்ட்ஸ் சஞ்சிகையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருதுகள் வழங்கும் நிகழ்வாக குளோபல் பிரான்ட்ஸ் விருதுகள் அமைந்துள்ளது. பரந்தளவு துறைகளில் சிறப்பை பதிவு செய்த வர்த்தக நாமங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கல் அமைந்துள்ளது.
7 minute ago
8 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
22 minute ago
1 hours ago