Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தேறிய வழங்கிய தவணைக்கட்டணப்பெறுமதி 20% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
முதலீட்டு வருமானம் 24சதவீதத்தால் வளர்ச்சியடைந்திருந்ததுடன், பங்கு முதலீடுகளில் சந்தைப்பெறுமதிகள் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், மொத்த வருமானம் 26சதவீதத்தால் உயர்ந்திருந்தது.
முதிர்வுக்கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருந்ததன் காரணமாக, செலுத்தப்பட்ட தேறிய காப்புறுதி அனுகூலங்கள் மற்றும் நஷ்டஈடுகள் 51சதவீதத்தால் அதிகரித்துக்காணப்பட்டது. 5.2 பில்லியன் ரூபாய் ஆயுள் நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், 2017 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று 35 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான வியாபாரத்துறப்பு விகிதத்தை கொண்டிருந்ததன் மூலம், வியாபாரத்தின் நிதி உறுதித்தன்மை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இலாபப்பெறுமதி 190 மில்லியன் ரூபாயிலிருந்து 267 மில்லியன் ரூபாயாக அதிகரித்திருந்தது. இதில் 117 மில்லியன் பெறுமதியான பொதுக்காப்புறுதி அலகான பெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸின் தொகை அடங்கியிருந்தது, இது மொத்த பெறுமதியின் 22 சதவீதமாகும்.
காப்புறுதியின் பெறுமதியை வலியுறுத்துவதற்காகவும் ஆயுள் காப்புறுதித்தீர்வுகளின் மூலமாக மக்கள் எவ்வாறு நிதிசார் வெற்றிகளை பதிவு செய்ய முடியும் என்பதை விளக்கும் ஒன்றிணைக்கப்பட்ட ஊடக விழிப்புணர்வு செயற்றிட்டமொன்றை, யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் ஆரம்பித்திருந்தது. ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத்திட்டம், நவம்பர் மாத நடுப்பகுதியில் நிறைவடைந்திருந்தது.
நவீன தொழில்நுட்பங்களையும் பிரத்தியேகமான சேவைகளையும் ஒன்றிணைத்து வழங்குவதில் நிறுவனம் புகழ்பெற்று காணப்படுவதுடன், துறையின் முதலாவது Facebook Messengerஅடிப்படையிலான காப்புறுதி ஆலோசகர் சேவையையும் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு ‘Ask Amanda’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதித்தீர்வுகளை பரிந்துரைக்கும் திறனை இந்த ஆலோசனை தீர்வு கொண்டுள்ளது. தற்போதைய வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை பயன்படுத்தி நஷ்டஈட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், தற்போது காணப்படும் காப்புறுதித்திட்டங்களின் விவரங்களை பரிசோதித்துக்கொள்ளவும் முடியும்.
அனுபவம் வாய்ந்த, வினைத்திறன் வாய்ந்த நிபுணர்கள் யூனியன் அஷ்யூரன்ஸ் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். நிறுவனத்தின் உறுதியான மூலதன இருப்பு மற்றும் சர்வதேச ரீதியில் முன்னிலையில் காணப்படும் மீள் காப்புறுதியாளர்களுடனான மீள் காப்புறுதி பங்காண்மைகளையும் பேணி வருகிறது. 2017இல் தனது 30 வருட பூர்த்தியை கொண்டாடும் யூனியன் அஷ்யூரன்ஸ், மக்களின் மீதும், பொருட்கள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துவதிலும் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இதனூடாக சகல பங்குதாரர்களின் வெற்றிக்கான பங்காளராக திகழ்வதை இலக்காகக்கொண்டுள்ளது.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago