Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒன்றிணைந்த அறிக்கையிடல் CMA விருதுகள் வழங்கலில், கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல் மற்றும் நேர்மை போன்றவற்றில் உயர் நியமங்களை பேணுவதில் காண்பித்திருந்த அர்ப்பணிப்புக்காக இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தினால் கௌரவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் சிறந்த பத்து ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. சிறந்த மூலதன வெளிப்படுத்தலுக்கான விசேட விருதையும் பெற்றுக் கொண்டது.
யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்திடமிருந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த ஆண்டில் விசேட விருதொன்றை வெற்றியீட்டியதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நிறுவனத்தின் வலிமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை போன்றவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. செயற்பாட்டு கண்ணியத்தன்மையை உறுதி செய்வதற்காக சர்வதேச கணக்கீட்டு நியமங்களைப் பின்பற்றுவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தம்மை அர்ப்பணித்துள்ளது. துரித வியாபார செயன்முறைகளில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்வதுடன், அதனூடாக சிறந்த நிதிசார் அறிக்கையிடலைக் கொண்ட பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில் சிறந்த நிதி அறிக்கையிடல் செயன்முறைகளில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வோம்.” என்றார்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள சகல நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரச உரிமையில் இயங்கும் நிறுவனங்கள், வங்கிகள், அரச துறை ஸ்தாபனங்கள், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இலாப நோக்கற்ற அமைப்புகள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இந்த விருதுகளுக்கு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. சர்வதேச ஒன்றிணைந்த அறிக்கையிடல் சம்மேளனத்தினால் (IIRC) வெளியிடப்பட்டிருந்த சர்வதேச (IR) கட்டமைப்புகளின் கொள்கைகளை ஆராய்ந்து வருடாந்த அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டிருந்தன. தந்திரோபாய நோக்கம் மற்றும் எதிர்கால போக்கு, தகவல் இணைப்பு, பெறுமதி உருவாக்கம், தங்கியிருக்கும் தன்மை மற்றும் பூர்த்தித்தன்மை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
37 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago