Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 ஜூலை 25 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், நான்கு சர்வதேச விருதுகளை தனதாக்கியுள்ளது. World Economic Magazine இனால் வழங்கப்பட்ட இந்த விருதுகளினூடாக, நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் சேவைச் சிறப்பு போன்ற துறையின் முன்னோடியான சாதனைகள் கௌரவிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த சிறந்த மற்றும் புத்தாக்கமான செயற்பாட்டாளர்களுக்கு வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டியிருந்த விருதுகளில் இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனம், இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் காப்புறுதி நிறுவனம், இலங்கையின் சிறந்த பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் மற்றும் மிகவும் புத்தாக்கமான பாங்கசூரன்ஸ் வெகுமதித் திட்டம் ஆகியன அடங்குகின்றன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தந்திரோபாயம் மற்றும் தூர நோக்குடைய செயற்பாடுகள் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. சிறந்த சேவைகளை வழங்குவது, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் போன்றவற்றினூடாாக வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை விஞ்சுவதில் நாம் எப்போதும் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றேன். எம்மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டு செயலாற்றும் வாடிக்கையாளர்களையும் இந்த தருணத்தில் நினைவுபடுத்துகின்றேன். வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறையில் எப்போதும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னோடியாக அமைந்துள்ளது. தூர நோக்குடைய, டிஜிட்டல் மயமான மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக இலங்கையின் சிறந்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கின்றது.” என்றார்.
இலங்கையில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்பதற்கான விருதினூடாக சிறந்த நிதி வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், தேறிய செலுத்திய தவணைக் கட்டண பெறுமதி ரூ. 15 பில்லியனைக் கடந்திருந்தது. முன்னைய ஆண்டின் பெறுமதியான ரூ. 13 பில்லியன் என்பதுடன் ஒப்பிடுகையில் இது கவனத்தில் கொள்ளத் தக்க அதிகரிப்பாாக அமைந்துள்ளது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 1.8 பில்லியன் என்பதிலிருந்து 46% இனால் அதிகரித்து ரூ. 2.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 921 மில்லியனிலிருந்து ரூ. 2.1 பில்லியனாக அதிகரித்திருந்தது. இது 123% அதிகரிப்பாகும்.
இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் காப்புறுதி நிறுவனம் எனும் விருதை வெற்றியீட்டியிருந்தமை மற்றுமொரு சாதனையாக அமைந்துள்ளது. நிதி வளர்ச்சிக்கு மேலதிகமாக, களத்தில் பல்வேறு பிரிவுகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னோடியாகத் திகழ்கின்றது. உதாரணமாக, சேவை சிறப்புக்கான நன்மதிப்பைப் பெற்றுள்ளதுடன், பாவனையாளர் நட்புத்திறன், சௌகரியம் மற்றும் அணுகல் திறன் போன்றவற்றை வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நிறுவனம் தனது பணியாற்றும் கலாசாரத்தையும் மேம்படுத்தி அதனூடாக ஊழியர்களுக்கு வலுவூட்டுகின்றது. தொடர்ச்சியாக 9 வருட காலமாக இந்நிறுவனம் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தெரிவாகியிருந்தது. சாதனை மிகுந்த Million Dollar Round Table (MDRT) தகைமையாளர்களை தயார்ப்படுத்தியிருந்ததனூடாக, ஊழியர் விருத்தியில் கொண்டிருக்கும் காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டியிருந்த விருதுகள் இரண்டும் பாங்கசூரன்ஸ் பிரிவில் காணப்பட்டிருந்தன. சிறந்த பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் மற்றும் இலங்கையிலுள்ள மிகவும் புத்தாக்கமானா பாங்கசூரன்ஸ் வெகுமதித் திட்டம் ஆகியன அவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025