S.Sekar / 2022 ஜூலை 11 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 வருடாந்த பாங்கசூரன்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் விருதுகள் வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வுக்கு “முதல் வகுப்பு சிறப்பு” என தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/யூனியன் அஷ்யூரன்ஸ் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் சுரேஷ் ராஜேந்திரா மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2021 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சிறப்பாக செயலாற்றியிருந்ததுடன், இலங்கையின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராகவும் தெரிவாகியிருந்தது. ரூ. 1 பில்லியனுக்கு அதிகமான ANBP பெறுமதியையும், 618 க்கு அதிகமான வங்கிக் கிளைகளை ஏழுக்கு அதிகமான முன்னணி வங்கி பங்காளர்களையும் தம் வசம் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவது எனும் நிறுவனத்தின் உறுதி மொழிக்கு மேலும் பக்கபலமாக இது அமைந்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் பிரிவில் சிறந்த சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள். சவால்கள் நிறைந்த ஆண்டிலும் பாங்கசூரன்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயலாற்றியிருந்ததை நான் அவதானித்தேன். புத்தாக்கமான தீர்வுகள், சேவைச் சிறப்பு மற்றும் டிஜிட்டல் சௌகரியம் போான்றவற்றினூடாக துறையில் முன்னோடிகளாக அமைந்திருந்தனர். இவர்களின் சிறப்பான செயற்பாட்டினூடாக, நாட்டின் பாங்கசூரன்ஸ் துறையில் புதிய யுகம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு இடைவெளியை குறைத்துக் கொள்வதிலும் பங்களிப்பு வழங்க முடிந்திருந்தது.” என்றார்.
கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளினூடாக இலாகாப் பெறுமதி பெருமளவு அதிகரித்திருந்ததுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கும் வழிகோலியிருந்தது என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே குறிப்பிடுகையில், “சிறப்பாக செயலாற்றியிருந்த அனைவருக்கும் பாராட்டுகள். தமது நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக இவர்கள் அனைவரும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தனர். தாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் முன்னேற்றத்தை எய்துவதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எம்மிடம் உயர் திறன் படைத்த அணி காணப்படுகின்றது. சிறந்த தொழில்நுட்ப மற்றும் கணனி வசதிகளுடன், எம்மால் சிறந்த தீர்வுகளை வழங்க முடிகின்றது.” என்றார்.
நிறுவனத்தினால் வங்கிப் பங்காளர்களுடன் உறுதியான, தந்திரோபாய உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இவை வெற்றிக்கு பெருமளவில் பங்களிப்பு வழங்கியுள்ளன.
பாங்கசூரன்ஸ் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், யூனியன் அஷ்யூரன்சினால் சிறந்த செயற்பாட்டாளர்கள் பலருக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. விருதுகள் வழங்கும் இரவின் மாபெரும் விருதான, சம்பியன் ஒஃவ் சம்பியன்ஸ் 2021 விருதை, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நாளிகையின் நிமேஷா செவ்வந்தி வீரவரண ஜயசேகர வெற்றியீட்டியிருந்தார்.
விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறப்பு விருதுகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நாளிகையைச் சேர்ந்த ஹர்ஷ சுதர்ஷன விஜேசிங்க மற்றும் நிமேஷா செவ்வந்தி வீரவரண ஜயசேகர ஆகியோர் வெற்றியீட்டியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் தொழில்நிலை மேம்பாட்டுக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்பதுடன், வெளிநாட்டு சுற்றுலா, கம்பனியினால் நிர்வகிக்கப்படும் சொகுசு வாகனம் போன்றன வழங்கப்படும்.
33 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago