S.Sekar / 2021 நவம்பர் 22 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப், அதன் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. உலகத் தரம் வாய்ந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை வெளிப்படுத்தியிருந்த கம்பனியின் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப்பைச் சேர்ந்த சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள். எமது செயலணியினரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதிலும், வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதிலும் நாம் கவனம் செலுத்தும் நிலையில், தொழிற்துறையில் எமது முதல் தொகுதி சாதனையாளர்கள் தமது நாமத்தை பதிவு செய்துள்ளதைக் காண்பதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.
கௌரவிக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு பரந்தளவு வாழ்க்கை முறை மற்றும் வியாபார ஊக்குவிப்பு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட அனுகூலங்களில் கம்பனியினால் எரிபொருள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் சொகுசு வாகனம் மற்றும் பண வெகுமதிகள் போன்றன அடங்கியிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது, சிறந்த சாதனைகள் மற்றும் உயர் வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய விற்பனைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஆயுள் காப்புறுதி முகவர்களைக் கொண்ட உயர் க்ளப் ஆகும். ஆயுள் காப்புறுதித் துறையில் வழங்கப்படும் மிகவும் சிறந்த வெகுமதித் திட்டத்தினூடாக இந்த உலகத் தரம் வாய்ந்த விற்பனை அணிக்கு இந்த வெகுமதிகளை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வியாபாரம் எனும் வகையில், எமது பிரதான இலக்கு என்பது, நாட்டினுள் ஆயுள் காப்புறுதியை வியாபிக்கச் செய்து, இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க பங்களிப்பு வழங்குவதாகும். இந்த கனவை நனவாக்கிடும் வகையில் எமது முன்னணி முகவர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் சாதனையாளர்களில்: உபுல் பிரியந்த, சாமர மென்டிஸ், ஹேரத் முதியன்செலாகே, சானக அப்புஹாமி, சந்துன் சிறிவர்தன, மலிந்த குருசிங்க, அமில ஹர்ஷன, நயோமி மீகஹாபொல, தரிந்து குருப்பு, ஜீவன் விஜேகோன், சுரேஷ் பண்டார, குமாரசிறி ராமநாயக்க, மஹேஷி பெர்னான்டோ, உபாலி விஜேசூரிய மற்றும் ரொஹான் விஜேவர்தன ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த 16 அங்கத்தவர்களும் Million Dollar Round Table (MDRT) க்கு தகைமை பெற்றுள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago