S.Sekar / 2021 ஜூலை 16 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் INVESTMENT+இல் முதலீடு செய்து முதிர்வின் போது 7.5% எளிய வட்டி வீதத்துடன் உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். INVESTMENT+ என்பது பிரத்தியேகமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருப்பதுடன், காப்புறுதிதாரருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் ஆயுள் காப்புறுதியையும் வழங்குகின்றது. காப்புறுதி கால நிறைவில் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வருமதியை வழங்குவதால், INVESTMENT+ என்பது குழந்தையின் கல்வி, புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பது அல்லது ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவது போன்ற குறுங்கால நிதி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த முதலீட்டுத் தீர்வாக அமைந்துள்ளது.

INVESTMENT+ இனால் காப்புறுதிதாரர்களுக்கு மூன்றாண்டுகள் எனும் குறுகிய காலப்பகுதியில் போதியளவு மூலதனத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் நிதியத்துக்கான பாதுகாப்பையும் வழங்குகின்றது. இதில் காணப்படும் ஆயுள் காப்பீட்டினூடாக, காப்புறுதிதாரர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவரில் தங்கியிருப்போருக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானம் வழங்கப்படும். இந்த முதலீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பதாரிகள் ஏற்றுக் கொள்ளத்தக்க சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதுடன், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே நிலவும் குறைந்த வட்டியுடனான சூழலில், INVESTMENT+ இனால் உறுதியான, குறுங்கால முதலீட்டுத் தீர்வு வழங்கப்படுகின்றது.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.4 பில்லியனைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், 2021 மார்ச் மாதத்தில் ஆயுள் நிதியமாக ரூ. 43.3 பில்லியனையும் கொண்டிருந்தது. 2021 மார்ச் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 306% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.
5 minute ago
9 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
20 minute ago
36 minute ago