Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் நாட்டின் காப்புறுதித்துறையில் தொடர்ச்சியாக புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சுகாதார காப்புறுதித்திட்டமான ‘யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதனூடாக முழுக்குடும்பத்துக்கும் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் அனுகூலங்கள் போன்றவற்றை வழங்குகிறது. யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் திட்டம், யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் திட்டத்தின் மேலதிக அங்கமாகவும் அமைந்துள்ளது.
யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் திட்டத்தினால் காப்புறுதிதாரருக்கும் அவரில் தங்கியிருப்போருக்கும் காப்புறுதி வழங்கப்படும். காப்புறுதிதாரருக்கு மிகவும் சௌகரியமான சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் மூலமாகப் பிரத்தியேகமான மற்றும் நுட்பமான வெளிநாட்டுக் காப்பீடு சேவை வழங்கப்படுகிறது.
இந்த அம்சத்தின் மூலமாக இலங்கையிலும், இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அக்காலப் பகுதியில் ‘Cashless Service’ சேவையையும் பெற்றுக்கொள்ளலாம்.
உலகின் சிறந்த நஷ்டஈடுகளை கையாளும் நிறுவனங்களில் ஒன்றான Euro-Center, யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் உடன் கைகோர்த்துள்ளது, இதனூடாக சௌகரியமான கண்காணிப்பு சேவைகள் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக வழங்கப்படுகின்றன.
Medilnk இனால் நவீன இலத்திரனியல் சுகாதார பராமரிப்பு வலையமைப்பு உட்கட்டமைப்பு வழங்கப்படுவதுடன், உள்நாட்டு மூன்றாம் நபர் கொடுப்பனவு சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேற்படி சகல அனுகூலங்களும் ‘Cashless Service’ சேவையுடன் செயற்படுத்தப்படும்.
யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ் காப்புறுதிதாரர்களுக்கு வழங்கப்படும் விசேடமான சலுகையாக, உலகின் சிறந்த வைத்தியர்களினால் தமது சிகிச்சை தொடர்பான மாற்று கருத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு நம்பிக்கையுடனும், இரகசியத்தன்மையுடனும் வழங்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago