2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸின் CEO’s Club திட்டம் அறிமுகம்

Gavitha   / 2017 ஜனவரி 30 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் வருடத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வங்கி காப்புறுதியியல் உதவி அதிகாரிகளைக் கௌரவிக்கும் வகையில் CEO’s Club எனும் நாமத்தில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டத்தினூடாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  

வங்கி காப்புறுதி உதவியாளர்கள் எனும் வங்கி காப்புறுதி சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக வாடிக்கையாளர்களுடன் நேரடியாகக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நபர்களாவர். யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி தீர்வுகளை மக்கள் மத்தியில் சென்றடையச் செய்வதற்கு அவர்களிடமிருந்து சிறப்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.  

வங்கி காப்புறுதிப் பிரிவினுள் சேவை புரியும் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்காக விசேடமாக அமைந்த CEO’s Clubஇன் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தமது வருடாந்த ANBP இலக்குகளைப் பூர்த்தி செய்கின்றமை தொடர்பில் 150 எனும் வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதுடன், ஆகக்குறைந்தது காப்புறுதித் திட்டங்கள் 48ஐ விற்பனை செய்திருத்தல் வேண்டும். வருடாந்த எய்தல் மட்டத்தை 75இல் பேணுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். முன்னைய ஆண்டில் வெளிப்படுத்தியிருந்த திறமைகளின் பிரகாரம் ஒரு வருட காலப்பகுதிக்கு CEO’s Club அங்கத்துவம் வழங்கப்படும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X