Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சகல வசதிகளும் படைத்த All - Suite Boutique Hotelஆக “திண்ணை” திகழ்கிறது. பொது மக்களின் பாவனைக்காக இந்த ஹொட்டல் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. வட பிராந்தியத்தின் ஹொட்டல் துறையின் நியமங்களை மேம்படுத்தும் வகையில் திண்ணை அமைந்துள்ளதுடன், ஓய்வெடுக்கவும், ஒன்றுகூடவும், இளைப்பாறவும் சிறந்த பகுதியாகவும் திகழ்கிறது. Thinnaveli Property Developers (pvt) ltd மூலமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹொட்டல், இந்தத் துறையில் காணப்படும் முதலாவது புத்தம்சங்களைக் கொண்ட ஹொட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மண்ணின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக தனது சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த நிறுவனம் தனது முழுமையான ஈடுபாட்டைக் கொண்டுள்ளதை இது தெளிவுபடுத்தியுள்ளது. சூழலுக்கு நட்புறவான வகையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளதுடன், “I love green” எனும் திட்டத்துடன் கைகோர்த்து செயலாற்றி வருகிறது. இதன் மூலமாக, குடா நாட்டில் பரவலாக காணப்படும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சமையலறையில் பயன்படுத்தப்படும் பால், பழங்கள் மற்றும் மரக்கறிகள் போன்றன அதன் சொந்த பண்ணைகளிலிருந்து சேதன பசுமையான முறையில் பெறப்படுகின்றன. இதன் மூலமாக, உயர்தரமான மூலப்பொருட்கள் பெறப்படுவதுடன், உள்ளூர் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .