Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 13 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ரெகியாபிஷேகய 2016” எனும் தேசிய கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ ஆயுள் காப்புறுதிச் சேவை வழங்குநராக, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. தேசிய இளைஞர் அபிவிருத்திப் பிரிவு மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி சேவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் கொழும்பு தாமரைத்தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரதான உடன்படிக்கை அண்மையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் அபிவிருத்திப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் மொஹான் பெரேரா, உப தலைவர் கிஹானி வீரசிங்க மற்றும் பதில் செயற்றிட்ட முகாமையாளர் சஷிகா பெர்னாண்டோ ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சார்பாகப் பிரதம நிறைவேற்று அதிகாரி டேர்க் பெரெய்ரா, பொது முகாமையாளர் (விற்பனை மற்றும் விநியோகம்) தர்ஷன அமரசிங்க மற்றும் சிரேஷ்ட பொது முகாமையாளர் (விற்பனை) கசுன் சமீர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
நாட்டின் எதிர்கால சந்ததிக்கு கைகொடுக்கும் வகையில், கல்வி மற்றும் உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு “ரெகியாபிஷேகய 2016” நிகழ்ச்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இளைஞர்களாகிய உங்களின் வாழ்க்கையின் வெற்றியை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியிலும், விசேட உதவிகளைப் பெற்றுத்தர யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் உங்கள் அனைவருக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் விசேட காட்சிக்கூடத்துக்கு விஜயம் செய்து, உங்களுக்கு அவசியமான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .