2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு உட்பட்ட 101 உள்ளூராட்சி மன்றங்களில் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக 106 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் 1,214 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு வறுமை நிலையை குறைப்பதற்காகவும் பொருளாதாரத்தை மேற்படுத்துவதற்காகவும் இந்தப் பிரதேசத்திற்கு பொருளாதார அடிப்படை வசதிகளைக் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உலக வங்கியின் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் 22.5 மில்லியன் யூரோக்கள் மூலம் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் வட மாகாணத்தில் 34 உள்ளூராட்சி மன்றங்கள் ,கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி மன்றங்கள், வட மத்திய மாகாணத்தில் 25 உள்ளூராட்சி மன்றங்கள், ஊவா மாகாணத்தில் 28 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் பிரதேச அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக மாகாண சபைகள். உள்ளூராட்சி மன்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழஙகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .