Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.
இதற்கான ஆலோசனைகள் அமைச்சரினால் நேற்று (01) மாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உர நிவாரணத்திற்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுமார் 5,000 விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு இயற்கை உரத்தை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவதற்காக 33,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025