Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 ஜூன் 10 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் முகமாக, எயார்டெல் லங்கா நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு நேரம் மற்றும் டேட்டா (Data) வசதிகளை வழங்கி உதவியுள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 8 மில்லியன் ரூபாயிற்கு அதிகமான பெறுமதியான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து தகவல் தொடர்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக 2021 ஜூன் 07ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக எயார்டெல் அறிவித்துள்ளது. இதனூடாக அவர்களது அன்புக்குரியவர்களுடனும் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென எயார்டெல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'ஒரு பொறுப்பான தொலைத்தொடர்பு வழங்குநராக, திடீர் அனர்த்த காலங்களில் நிவாரணம் மற்றும் அணுகத்தக்க விதமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நாங்கள் முன்கூட்டியே உதவ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். தொற்றுநோய், லொக்டவுண் மற்றும் வெள்ளம் ஆகிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை சமாளிப்பது மிகவும் கடினம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த நிவாரணத்தின் நன்மை அதன் முக்கியமான தேவை உள்ளவர்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்,' என எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் எயார்டெல் பாவனையாளர்களுக்கு இந்த நிவாரண ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago