2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரிக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான (NCE) விருது வழங்கும் விழாவில், பெறுமதி வாய்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் அதிசிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருதையும், மத்திய பிரிவிற்கான தங்க விருதையும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி வென்றிருந்தது. மேலும், வெள்ளவத்தை நித்தியகல்யாணியின் அங்கத்துவ நிறுவனமான NJ Exports நிறுவனம் பாரிய அளவுக்கான வெள்ளி விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது. உயர் தரத்துடன் கூடிய நவீன வடிவமைப்பிலான ஆபரணங்களை நம்பிக்கையுடன் கொள்வனவு செய்வதற்குச் செல்ல வேண்டிய மிகச் சிறந்த இடமாக மக்கள் மனங்களை வென்றுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியானது, 25,000க்கும்  மேற்பட்ட உன்னத கண்கவர் வடிவமைப்புகளை தன் வசம் கொண்டுள்ளது. உயரிய தரத்தினாலான பிளட்டினம், தங்கம், வெண்தங்கம், இரத்தினம் மற்றும் வைரங்களினாலான ஆபரண உற்பத்திக் கூடத்தையும், உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சி பெற்ற நிபுணத்துவ அறிவைக் கொண்ட அனுபவம் வாய்ந்த ஊழியர்களையும் நித்தியகல்யாணி ஜுவலரி கொண்டுள்ளது. 

CAD, 3D Printing போன்ற புதிய தொழில்நுட்ப செயன்முறைகள் மூலம், வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் உதிக்கும் படைப்புகளை அதே பொலிவுடன் உற்பத்திச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்ட நித்தியகல்யாணி ஜுவலரி, தமது ஆபரண உற்பத்திகளை பிரித்தானியா, துபாய், கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. “இது எமது அணியின் கடின உழைப்பை வெளிப்படுத்தும் சாதனையாகும். தரம், விரைவான வினியோகம் மற்றும் இந்த உற்பத்திகளை வடிவமைத்து, தயாரிக்கும் எமது உள்நாட்டு அணியின் திறமை ஆகியவற்றின் மீது நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றமைக்கு, இந்த விருதுகள் மிகச் சிறந்த சான்றாக உள்ளன” என, வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜெயராஜா தெரிவித்தார். வாடிக்கையாளர்களை பெரிதும் கவரக்கூடிய வகையிலான புதிய வடிவமைப்புகளை நித்தியகல்யாணி ஜுவலரி கொண்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X