Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 04 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன டயர்கள், டயர் ரீபில்டிங் மற்றும் கட்டட நிர்மாண பொருட்கள் ஆகியன தொடர்பில் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த MAPS இன்டர்நஷனல் நிறுவனம், வீட்டுப்பாவனை இலத்திரனியல் சாதனங்கள் இறக்குமதியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. எனும் வர்த்தக 'MAPS' நாமத்திலமைந்த வீட்டுப்பாவனை இலத்திரனியல் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் பெருமளவு காணப்படுகின்றன. இந்த வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆயிள இன்டர்நஷனல் தனது தலைமை அலுவலகத்தையும், காட்சியறையையும் இல. 173/1/2, ஹல்பிட்ட, ஹொரண வீதி, பொல்கஸ்ஸோவிட்ட எனும் முகவரியில் திறந்து வைத்துள்ளது.
'MAPS' வீட்டுப்பாவனை இலத்திரனியல் சாதனங்களில் மின்விசிறிகள், கேத்தல்கள், மின்னழுத்திகள், DVD பிளேயர்கள், குக்கர்கள் மற்றும் மேலும் பல உபகரணங்கள் உள்ளடங்கியுள்ளன. நாடு முழுவதும் காணப்படும் விற்பனையகங்களிலிருந்து இந்த சாதனங்களை ஒரு வருட உத்தரவாதத்துடன் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
MAPS இன்டர்நஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இலத்திரனியல் சாதனங்கள் விற்பனையில் 'MAPS' வர்த்தக நாமத்தை ஈடுபடுத்த முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
'இலங்கையர்களுக்கு தரமான 'MAPS' இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்வதற்கு தற்போது வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு வருட உத்தரவாதத்துடன், இவற்றை கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். குறுகிய காலப்பகுதியில் எமது நிறுவனம் நிர்மாணப்பொருட்கள், 'MAPS' வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் 'UNICORN' டயர்கள் inner-flaps விற்பனையில் வளர்ச்சியடைந்துள்ளது. மக்களின் பெருமளவு வரவேற்பின் காரணமாக, அவர்களுக்கு மேலும் அனுகூலம் சேர்க்கும் வகையில் புதிய உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட நாம் தீர்மானித்தோம். நவீன சாதனங்களை பயன்படுத்தி நாம் உற்பத்தி, ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கிறோம்' என்றார்.
'இலங்கைச் சந்தைக்கு மாதமொன்றில் அவசியமான டயர் inner flaps தேவையின் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகயை MAPS இன்டர்நஷனல் முன்னெடுக்கிறது. 'MAPS' தயாரிப்புகளின் நம்பகத்தன்மைக்கு சிறந்த சான்றாக இது அமைந்துள்ளது. இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் தெரிவுகளில் மேலும் பல தயாரிப்புகளை உள்வாங்குவதற்கு MAPS தீர்மானித்துள்ளது' என மேலும் குறிப்பிட்டார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago