2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆறு ஃபினான்ஸ் கம்பனிகள் குறித்த தீர்மானம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்கு பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள ஆறு ஃபினான்ஸ் கம்பனிகளின் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பான தீர்மானத்தை இந்த ஆண்டின் இறுதியினுள் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

லங்கை மத்திய வங்கியின் மூலமாக மொத்தமாக 48 ஃபினான்ஸ் கம்பனிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன. ஜனவரி மாதம் பெருமளவு நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த என்ட்ரஸ்ட் முகவர் நிறுவனத்தை தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்திருந்ததுடன், அதன் துணை நிறுவனங்களான ஸ்டான்டர்ட் கிரெடிட் ‡பினான்ஸ் மற்றும் மல்டி ஃபினான்ஸ் பிஎல்சி ஆகியவற்றை தன்வசப்படுத்தியிருந்தது.

மேலும் பத்து நிறுவனங்கள் வழிகாட்டல்களைப் பெற வேண்டிய நிலையில் காணப்பட்டாலும், அவை இடரை எதிர்கொள்ளவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆனாலும் ஆறு நிறுவனங்கள் திரள்வு தொடர்பான பெருமளவு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பொது மக்களை நம்பிக்கை வாய்ந்த மற்றும் அங்கிகாரம் பெற்ற நிதிசார் நிறுவனங்களில் தமது கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை முதலீடு செய்யுமாறு இலங்கை வங்கி பெருமளவு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதிலும், அவற்றை மக்கள் சிலசமயங்களில் கவனத்தில் கொள்வதில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X