2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பட்டப்படிப்புக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் SLIIT

A.P.Mathan   / 2013 ஜூன் 10 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக முகாமைத்துவ துறையில் 20,000 க்கும் அதிகமான பட்டதாரிகளையும், நிபுணர்களையும் உருவாக்கிய இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிலையமான SLIIT ஆனது, தனது வழமையான ஜனவரி மாத ஆட்சேர்ப்புக்கு மேலதிகமாக அரையாண்டில் (ஜூன் மாதம்) புதிய மாணவர்களை இணைத்துக் கொள்கிறது. இது மாணவர்களின் கோரிக்கையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது SLIIT நிலையமானது B.Sc. Special (Hons) Degree programmes in Information Technology, Computer Systems and Networking, Information Systems and Software Engineering ஆகிய கற்கைநெறிகளை வழங்கி வருகிறது. மேலும் மனிதவள மூலதன முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், நிதியியல் மற்றும் கணக்கியல், நிர்வாக தகவல் சிஸ்டம்ஸ் மற்றும் தர முகாமைத்துவம் போன்ற பிரிவுகளில் சிறப்பு வர்த்தக நிர்வாக பட்டப்படிப்பு கற்கைளை வழங்கி வருகிறது. இந் நான்கு பட்டப்படிப்புகளும் பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் (UGC) அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
 
மேலும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள தமது சர்வதேச பங்காண்மை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பினை மாணவர்களிற்கு SLIIT நிலையத்தின் மூலம் வழங்கப்பகிறது.
 
இப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு உயர்தரத்தில் (இலங்கை/லண்டன்) மூன்று பாடங்களில் சித்தியடைந்தோ அல்லது ஒரே அமர்வில் குறிப்பிட்ட பாடத்தில் சித்தியெய்தியோ அல்லது SLIIT நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் அவசியமாகும். 
'எமது மாணவர்களிற்கு சிறந்த தரத்திலான கல்வியையும் மற்றும் கல்விசார் வாய்ப்புகளையும் நாம் வழங்கி வருகின்றோம்' என SLIIT கல்வி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் எமது பட்டதாரிகளின் உயர் வேலைவாயப்பு திறன் விகிதம் சான்றாக அமைந்துள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
இக் கல்வி நிலையமானது மாணவர்களிற்கு பரந்துபட்ட கல்விசார் வாய்ப்புகளை வழங்குவதுடன், மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை இலங்கையில் பூர்த்தி செய்வதற்கு அல்லது அவர்களின் விருப்பத் தெரிவிற்கமைய வெளிநாடுகளில் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது.
பரந்துபட்ட கல்விசார் திட்டங்களுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக - துறைசார் உறவினை ஊக்குவிப்பதன் ஊடாகவே மாணவர்களின் வளர்ச்சி சாத்தியமாகும்' என SLIIT இன் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார். 'மேலும் நாம் மாணவர்களை பிரத்தியேகமாகவும், வகுப்பறை, விளையாட்டு அரங்கு மற்றும் இதர நடவடிக்கைகளின் போது ஊக்குவிக்கின்றோம்' என்றார். SLIIT நிலையத்தில் மாணவர்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில் பல வசதிகள் காணப்படுகின்றன.
 
மேலும் அவர் கூறுகையில், 'இப் கற்கைநெறிக்கான உயர் கேள்வி காரணமாகவே கடந்த ஆண்டு தொடக்கம் ஜூன் மாதத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ள SLIIT தொடங்கியது. எனவே, IT மற்றும் வர்த்தக பட்டப்படிப்புக்கான மாணவர் தொகையை அதிகரிப்பதன் மூலம் அண்மையில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்த்தோம்' என்றார்.
 
SLIIT இன் பிரதான பல்கலைகழகங்கள் மாலபே, கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளதுடன், மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் SLIIT நிலையங்கள் அமைந்துள்ளன. SLIIT நிறுவனத்தின் ஊடாக நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையில் பங்களிப்பை செலுத்தக் கூடிய வகையிலான திறமையான பட்டதாhரிகளை உருவாக்குவதற்கு பல கல்வி பாடத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள www.sliit.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசியுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .