
புத்தாக்கங்களை உருவாக்குவதில் சர்வதேச முன்னோடியான 3M ஆனது, தகவல் தொழில்நுட்ப துறைக்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற infotel கண்காட்சியின் வெள்ளிப் பங்காளராக இணைந்து கொண்டிருந்தது.
அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக தொழில்நுட்பம் உள்ளதனால் இந்த வருட infotel கண்காட்சியின் தொனிப்பொருள் 'வாழ்வை மேம்படுத்தல்' ஆகும். இவ் வருட கண்காட்சியில் 'அறிவு மையம்' ஒன்றினை உருவாக்கி அதனூடாக இலங்கையின் நிறுவனங்களிற்கு தமது புத்துருவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குவதே infotel இன் குறிக்கோளாக அமைந்திருந்தது.
'வெளிப்படுத்தப்படாத தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புத்தாக்கத்துடன் கூடிய புதிய தீர்வுகள் மூலம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கு வலுச்சேர்க்க முடியும் என்பதில் 3M நம்பிக்கை கொண்டுள்ளது. வாழ்க்கை முறையினை மேம்படுத்தக்கூடிய உலகினை மீண்டும் உருவாக்குவதற்கான திறன் இதுவாகும்' என 3M இன் துணை தலைவர் சுரேன் ராஜநாதன் தெரிவித்தார்.
இக் கண்காட்சியில் 3M நிறுவனத்தின் வலையமைப்பு கேபிள் மற்றும் நாட்டின் தற்போதைய நடைமுறையாக உள்ள ஃபைபர் (Fiber) இணைப்புக்கள் குறித்த தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
எமது அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் ஊடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு வலுசேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம். இந்த கண்காட்சியின் ஊடாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி இலங்கையை சர்வதேச தரத்திற்கேற்ப ஒழுங்கமைக்க முடியும் என 3M எதிர்பார்க்கிறது' என இலத்திரனியல் தொடர்பாடல் பிரிவின் விற்பனை முகாமையாளர் டெரிக் பெர்டினான்டஸ் தெரிவித்தார்.
இலங்கையின் மிகப்பெரிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியான Infotel ஆனது, இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சம்மேளனத்தினால் (FITIS) ஒழுங்கு செய்யப்படுகிறது. இக் கண்காட்சிக்கு பெருமைக்குரிய நிறுவனங்களைச் சேர்ந்த தீர்மானம் எடுக்கும் பிரதிநிதிகள் ஆதரவளித்து வருகின்றனர். இக் கண்காட்சியில் வர்த்தக வாய்ப்புகளிற்கு இலாபகரமான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.