.jpg)
ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் கடந்த ஆண்டு பதிவாகியிருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 13.8 வீதத்தால் அதிகரித்து 140,319 ஆக பதிவாகியிருந்தது என சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23.1 வீதத்தால் அதிகரித்து 1,001,643 ஆக பதிவாகியிருந்தது.
தெற்காசிய சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 26,792 ஆக பதிவாகியிருந்தது. குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 17,912 ஆக பதிவாகியிருந்தது.
சீனாவிலிருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 139.9 வீதத்தால் அதிகரித்து 14,274 ஆக பதிவாகியிருந்தது.
2014ஆம் ஆண்டின் நிறைவில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எய்துவது எனும் இலக்கை கொண்டு இலங்கை தனது சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.